#முக்கியச் செய்திகள் | நாடு முழுவதும் சுய ஊரடங்கு... இலங்கை சிறையில் வன்முறை..!

#முக்கியச் செய்திகள் | நாடு முழுவதும் சுய ஊரடங்கு... இலங்கை சிறையில் வன்முறை..!
#முக்கியச் செய்திகள் | நாடு முழுவதும் சுய ஊரடங்கு... இலங்கை சிறையில் வன்முறை..!
Published on
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க, இன்று நாடு முழுவதும் சுய ஊரடங்கு. 3ஆயிரத்திற்கும் அதிகமான ரயில்கள் ரத்து. பேருந்துகள் நிறுத்தம்.
தமிழகத்தில் மேலும் 3பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று. இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 315ஆக உயர்வு.
தனியார் ஆய்வகங்களும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி. 4ஆயிரத்து 500 ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என உத்தரவு.
கொரோனா பரவாமல் தடுக்க மாநில அரசுகளுக்கு 2ஆயிரத்து 570 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது மத்திய அரசு. தமிழகத்துக்கு 987 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
தமிழகத்தில் வரும் 27ஆம் தேதி தொடங்கவிருந்த பத்தாம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு. புதிய அட்டவணை பின்னர் வெளியிடப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு.
புதுச்சேரியில் நாளை முதல் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு. கொரோனா பரவலைத் தடுக்க முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு.
உலகளவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 13ஆயிரத்தை தொட்டது. இத்தாலியில் நேற்று ஒரேநாளில் 793பேர் உயிரிழந்த சோகம்
கொரோனா பரவியதாக வெளியான வதந்தியால் இலங்கை சிறையில் வன்முறை. காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கைதி உயிரிழப்பு.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com