இன்றைய காலை தலைப்புச் செய்திகள் | 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு முதல் டெங்கு பாதிப்பு வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பது முதல் டெங்கு காய்ச்சல் பாதிப்பு வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.
இன்றைய காலை தலைப்புச் செய்திக
இன்றைய காலை தலைப்புச் செய்திகமுகநூல்
Published on
  • தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் கோடை மழை பெய்தது. மேலும், இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

  • 26 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தல்.

  • தமிழ்நாட்டில் எட்டு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு. இந்நிலையில், டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தல்.

  • மும்பையில் பிரம்மாண்ட வாகன பேரணியில் பிரதமர் மோடி பங்கேற்ற நிலையில், சாலையின் இருபுறமும் மலர்தூவி தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்பு.

  • குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் 300 பேருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல்.

  • செந்தில் பாலாஜியின் பிணை வழக்கை இன்று மீண்டும் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம். மேலும், அமலாக்கத்துறை விசாரணையை ஒத்திவைக்க கோரிய நிலையில், இடைக்கால பிணை வேண்டி செந்தில்பாலாஜி தரப்பு கோரிக்கை.

  • குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்டதாக கூறப்படும் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த தவறுகளை சுட்டிக்காட்டுவோர் மீது குண்டர் சட்டம் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாக நீதிமன்றம் ஆதங்கம்.

இன்றைய காலை தலைப்புச் செய்திக
விழுப்புரம் | “கே.ஆர்.பாளையம் கிணற்றில் இருந்தது மலம் அல்ல... தேனடை” - வட்டாட்சியர்
  • மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்ட வீடியோவை வெளியிட்டு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார். மேலும், விஜயகாந்த் போன்ற ஒருவரை இனி பார்க்கவே முடியாது என்றும் புகழாரம்.

  • ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில், மருத்துவமனையில் அவர் தீவிர சிசிச்சை பெற்றுவருகிறார். இந்நிலையில், இது எதிர்க்கட்சியின் சதி என ஆளுங்கட்சி குற்றச்சாட்டு.

  • ஐபிஎல் தொடரில் ஆறுதல் வெற்றி பெற்றது பஞ்சாப் அணி. ஏற்கெனவே பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்த ராஜஸ்தான் அணியை, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com