தமிழ்நாட்டில் இன்று 13 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், வெயிலுக்கான ஆரஞ்சு அலர்ட் விடுத்ததுள்ளது வானிலை ஆய்வு மையம்.
தமிழ்நாட்டில் 17 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து பதிவான வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதன்படி, தருமபுரியில் 48 ஆண்டுகளுக்கு பிறகு 108.5 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரித்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.
வெயில் சுட்டெரித்த வேளையில் தருமபுரி, ஏற்காடு உள்ளிட்ட இடங்களில் லேசான மழை பெய்தது. இந்நிலையில், திருப்பத்தூரில், ஆலங்கட்டி மழை பெய்தது.
உத்தரப்பிரதேசத்தின் அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் யார்?. வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள் என்பதால் கட்சித்தலைமை இன்று அறிவிக்கிறது.
சேலம் அருகே இரு தரப்பினர் இடையே வெடித்த மோதலில் 5 கடைகளுக்கு தீ வைக்கப்பட்டது. இந்நிலையில், 19 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருத்தாசலம் அருகே வளைகாப்புக்காக சொந்த ஊர் சென்றபோது ஓடும் ரயிலில் இருந்து கர்ப்பிணி தவறிவிழுந்து உயிரிழப்பு.
பெண்ணை துன்புறுத்தியதாக மேற்கு வங்க ஆளுநர் மீது திரிணமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் பாலியல் புகார் அளித்துள்ளார். இது தன்னை அவமதிக்கும் முயற்சி என ஆளுநர் அனந்த போஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் இளவரசரை நாட்டின் அடுத்த பிரதமராக்குவதற்காக பாகிஸ்தான் ஆர்வம் காட்டிவருகிறது என குஜராத்தில் பிரதமர் மோடி விமர்சனம்.
ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு வாக்கு சேகரித்ததற்காக பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும் என கர்நாடகாவில் பரப்புரையின் போது ராகுல்காந்தி வலியுறுத்தல்.
மக்களவைத் தேர்தலுக்குப்பிறகு, ராகுல்காந்தி காங்கிரஸை தேடி நடைப்பயணம் மேற்கொள்வார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சனம்.
நாட்டிற்காக தனது குடும்பத்தினர் செய்த தியாகங்களை அறியாதவர் பிரதமர் மோடி என பிரியங்கா காந்தி விமர்சனம். மேலும், மோடியின் கண்களுக்கு வாரிசு அரசியல் மட்டுமே தெரிவதாகவும் காட்டம்...
கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது என பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. மேலும், ரத்தம் உறைதல் உள்ளிட்ட எந்த பக்கவிளைவுகளும் இந்த தடுப்பூசியால் ஏற்படாது எனவும் உறுதி.
கோவிஷீல்டு தடுப்பூசியை செலுத்திக்கொண்டவர்கள் பாஜகவுக்கு எதிராக வாக்களிப்பார்கள் என அகிலேஷ் யாதவ் விமர்சனம் செய்துள்ளார். மேலும், தடுப்பூசி தயாரித்த நிறுவனங்களிடமிருந்து பாஜக நிதி பெற்றதாகவும் குற்றச்சாட்டு.
கர்நாடகா மாநிலம் பெல்லாரியில் நகைக்கடையில் ஏசி வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்நிலையில், புகைமண்டலத்துக்கு நடுவே பலர் ஓடி உயிர் தப்பிய நிலையில், மூன்று ஊழியர்கள் படுகாயம்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீ காரணமாக 200 ஏக்கரிலான வனப்பகுதி சேதமடைந்துள்ளது.
தொடர் மின்வெட்டு ஏற்படுவதாகக் கூறி சென்னை சைதாப்பேட்டை மக்கள் போராட்டம். நடத்தினர்.இந்நிலையில், கிண்டி - பிராட்வே சாலையில் அமர்ந்து மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலையான சம்பவத்தில், நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது காவல்துறை.
நாமக்கல்லில் உணவகத்தில் பூச்சி மருந்து கலந்த சிக்கன் ரைஸ் சாப்பிட்டவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணம். இந்நிலையில், தன் பழக்க வழக்கங்களை தட்டிக்கேட்டதால் குடும்பத்தினரின் உணவில் விஷம் கலந்தததாக அக்குடும்பத்தின் பேரன் வாக்குமூலம்.
ரயிலில் நயினார் நாகேந்திரனின் விடுதி மேலாளரிடம் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்த்தில், சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரான இருவரிடம் ஒன்பரை மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
சென்னையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு. மேலும், ஜூன் 4ஆம் தேதி வரை மையங்களை சுற்றி டிரோன்களை பறக்கவிடவும் காவல்துறை தடை விதித்துள்ளது.
சென்னையில் வாகன நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர் ஒட்டியதாக 421 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் முதல் நாளில் ஒரு லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூல்.
நாகை அருகே சிபிசிஎல் நிறுவனத்தைக் கண்டித்து கிராம மக்கள் 3ஆவது நாளாக உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர். இந்நிலையில், கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தல்.
கர்நாடக எம்.பி. பிரஜ்வல் ஆபாச வீடியோ விவகாரத்தில், முன்னாள் அமைச்சர் ஹெச்.டி. ரேவண்ணா முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல்.
ஆந்திராவில் கண்டெய்னர் லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட இரண்டாயிரம் கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதில், விசாரணையில் ரிசர்வ் வங்கியின் பணம் என தகவல்.
இந்தியாதான் தங்களின் பரம எதிரி என பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி சர்ச்சை பேச்சு. மேலும், காஷ்மீருக்கு தார்மீக ரீதியாக தொடர்ந்து ஆதரவு அளிப்போம் எனவும் கருத்து.
ஒடிசாவில் வி.கே.பாண்டியனின் மனைவியான ஐ.ஏ.எஸ் அதிகாரி சுஜாதா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், அரசு பதவியை தவறாக பயன்படுத்தியதாக புகார் எழுந்ததால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் மீது இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் பட நிறுவனம், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது. உத்தமவில்லன் பட தோல்வியையடுத்து 30 கோடி ரூபாயில் படம் செய்து தருவதாகக் கூறி தாமதப்படுத்துவதாக கடிதம் எழுதப்பட்டுள்ளது.
ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. கடைசி பந்தில் விக்கெட்டை வீழ்த்தி, வெற்றிக்கு வித்திட்ட புவனேஷ்வர்குமார் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
பிரேசிலில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் தண்ணீரில் மிதக்கும் நகரங்கள்.இந்நிலையில், வெள்ளத்தில் சிக்கி 13 பேர் உயிரிழப்பு.