ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பேட்டிங்கில் ருதுராஜ், பவுலிங்கில் தேஷ்பாண்டே மிரட்டல் ஆட்டத்தை விடுத்து ஹைதராபாத் அணியை வீழ்த்தி சென்னை அபாரம் வெற்றியடைந்தது.
சென்னை அருகே சித்த மருத்துவர் மற்றும் அவரது மனைவியை சிகிச்சை பார்ப்பது போல வந்தவர்கள் கழுத்தை அறுத்து கொன்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இரட்டை கொலை நடந்த இடத்தில் ஆவடி காவல் ஆணையர் நேரில் விசாரணை நடத்தினார். இந்நிலையில், மோப்பநாய் உதவியுடன் தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும், சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பின் மேற்கூரையில் சிக்கித்தவித்த கைக்குழந்தையை சாதுர்யமாக செயல்பட்டு மீட்டவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது.
வாக்கு எண்ணும் மையங்களை சுற்றி டிரோன்கள் பறக்க தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வுத்தரவினை விருதுநகர், தேனி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகங்கள் பிறப்பித்துள்ளது.
ராமர் கோயிலை அவமதித்தவர்களை தேர்தலில் மக்கள் நிராகரிப்பார்கள் என கர்நாடக தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி ஆவேசம்.
பெரும் பணக்காரர்களுக்காகவே பிரதமர் மோடி பணியாற்றி வருகிறார் என ஒடிசா தேர்தல் பரப்புரையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
காங்கிரஸ் ஆட்சியில் 132 முறை மாநில அரசுகள் கவிழ்ப்பு என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு.
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்திய அரசியலமைப்பை மாறும் என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மீண்டும் குற்றச்சாட்டு.
மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை ஓடிசா அரசு நிறைவேற்றவில்லை என நவீன் பட்நாயக் மீது பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா குற்றச்சாட்டு.
சர்வாதிகார ஆட்சியை விட கூட்டணி ஆட்சியே சிறந்தது என பிரதமர் மோடிக்கு உத்தவ் தாக்கரே ஆதரவு சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் பதில்.
அகாலிதளம் கட்சிக் கூட்டத்திற்கு வந்த தொண்டர்களிடையே திடீர் மோதல் ஏற்பட்டதில் நாற்காலிகளை தூக்கி வீசியும், தடிகளால் தாக்கிக் கொண்டதாலும் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலை சந்திக்க மனைவிக்கு அனுமதி மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதற்கு பிரதமர் மோடி பதில் சொல்ல வேண்டும் என ஆம் ஆத்மி வலியுறுத்தல்.
கோடைவிடுமுறையை கொண்டாட சுற்றுலா தலங்களில் குவிந்த மக்கள், குடும்பத்துடன் பொழுதைக் கழித்து உற்சாகம்.
முதுமலை வனப்பகுதியில் குட்டியுடன் உலாவிய யானை சுற்றுலா வந்த வாகனத்தை திடீரென துரத்தியதால் பரபரப்பு.
வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைத்தால் போராட்டம் வெடிக்கும் என கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் எச்சரிக்கை.
நாகை அருகே பின்புற கண்ணாடி இல்லாத அரசு பேருந்தை வாகன ஓட்டிகள் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.
திருச்சி அருகே பணி நேரத்தில் மதுபோதையில் இருந்த நியாய விலை கடை ஊழியர் அங்கே வந்த பெண்ணிடம் ரகளையில் ஈடுபட்ட காட்சிகள் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டவர் மீது புகார் கொடுத்தவரை காவல்துறையினரே காட்டிக் கொடுத்ததால் அதிர்ச்சி.
வெள்ளியங்கிரி கோயிலுக்கு சென்ற பக்தர் மலையேற்றத்தின் போது உடல்நலக்குறைவு ஏற்பட்டு மரணம்.
உதகையில் 84 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.இந்நிலையில், 73 ஆண்டுகளுக்கு பிறகு பதிவான அதிகபட்ச வெப்பநிலையில் பதிவாகியுள்ளது.
இந்திய பயணத்தை ஒத்திவைத்த டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார்.இந்நிலையில், பிரதமர் லீ கியாங்கை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் ஒடிசாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது மோகன் பகான் அணி.
ஐரோப்பிய துடுப்பு படகோட்டுதல் சாம்பியன் ஷிப் போட்டியில் ஒட்டுமொத்தமாக 8 தங்கப் பதக்கங்களை வென்று அசத்திய பிரிட்டன்.