மக்களவைத் தேர்தலை முன்னிட்டு 88 தொகுதிகளில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதில் 13 மாநில மக்கள் ஜனநாயக கடமை ஆற்றுகிறார்கள்.
கேரளாவில் சற்று நேரத்தில் ராகுல்காந்தி போட்டியிடும் வயநாடு உள்பட மாநிலத்தின் 20 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
கர்நாடகாவில் 14 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக தேர்தல் நடைபெறும் இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விவிபேட் இயந்திரங்களில் பதிவாகும் ஒப்புகை சீட்டுகளை முழுவதுமாக எண்ணக்கோரிய வழக்தில் இன்று தீர்ப்பளிக்கிறது உச்சநீதிமன்றம்.
கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் வழிகாட்டுதல்களை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்நிலையில், சிறு பிரச்னை என்றாலும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளவேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்.
திரவ நைட்ரஜனை உணவுப் பொருட்களுடன் நேரடியாக கலந்து விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு வணிகர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மணல் குவாரி முறைகேடு வழக்கில் 5 மாவட்ட ஆட்சியர்களிடம் அமலாக்கத்துறையினர் 11 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்நிலையில், அடுத்ததாக ஒப்பந்ததாரர்களை விசாரணைக்கு அழைக்க அதிகாரிகள் திட்டம்.
(விரிவாக அறிய.... மணல்குவாரி முறைகேடு | 5 ஆட்சியர்கள் ED விசாரணைக்கு ஆஜர்... சம்பவத்தின் பின்னணி என்ன? முழு விவரம்!)
வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும் எனவும் அறிவுறுத்தல்.
பிரதமர் மோடி 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடைக்கோரி வழக்ககில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறவுள்ளது.
திஹார் சிறையில் கெஜ்ரிவால் துன்புறுத்தப்படுவதாக பிரதமர் மோடிக்கு ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் கடிதம் எழுதியுள்ளார். கெஜ்ரிவாலை 24 மணி நேரமும் கண்காணிப்பது ஏன் எனவும் கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அரசு பேருந்துகளின் ஆயுட்காலத்தை முன்பிருந்தது போல் குறைத்து புதிய பேருந்துகளை வாங்கவேண்டும் எனவும் பேருந்துகளை முறையாக பராமரிக்கவேண்டும் எனவும் தமிழக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.
கோவையில் வாக்காளர் பட்டியலில் இருந்து பலரது பெயர் நீக்கப்பட்டதாக கூறி அண்ணாமலை ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், விரலில் வாக்கு செலுத்திய கறுப்பு மை அடையாளத்துடன் நியாயம் கேட்டுள்ள வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரல்.
வைகை ஆற்றில் மீண்டும் இறங்கி தடம்பார்த்த கள்ளழகர். இந்நிலையில், கோவிந்தா... கோவிந்தா... என முழக்கமிட்டு பக்தர்கள் தரிசனம்.
புதுக்கோட்டை சங்கன்விடுதி அருகே குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாக புகார் எழுந்ததன் பேரில், நேரில் விசாரணை செய்து தண்ணீர் மாதிரியை பரிசோதனைக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.
திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வீட்டில் நகை கொள்ளை தொடர்பாக விசாரிக்கப்பட்ட பணிப்பெண் தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார். மன உளைச்சல் ஏற்படுத்தியதாக ஞானவேல்ராஜா மீது பணிப்பெண்ணின் மகள் புகார் அளித்துள்ளார்.
கூடலூரில் சாலையோரம் இருந்த பலாப்பழத்தை ருசித்த ஒற்றை யானையை வாகனத்திலிருந்து ஒலி எழுப்பியதும் பழத்துடன் ஓட்டம் பிடித்தது... யானையின் அந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் சார் பதிவாளர் மற்றும் அவரது மனைவிக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும், 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடலூரில் அரசு பேருந்து ஓட்டுநர் மீது போதையில் இருந்த இளைஞர் தாக்குதல் நடத்தியதில், கண்டனம் தெரிவித்து போக்குவரத்து ஊழியர்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.
கோவை மருதமலை கரிவரதராஜ பெருமாள் கோயிலில் நகைகள் திருட்டு போனதை அடுத்து, அர்ச்சகரை கைது செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கையில் மலை மீது இருந்து குதித்த இளைஞர், 5 நாட்கள் கழித்து மீண்டு வந்த அதிசயம். சிறு காயங்களுடன் உயிர் தப்பியவரை, தொழிலாளர்கள் மீட்டுள்ளனர்.
புழுதி புயல் தாக்கியதால் ஆரஞ்சு நிறத்தில் காட்சியளிக்கும் ஏதென்ஸ் நகரம்.இந்நிலையில், பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் என கிரீஸ் அரசு அறிவுறுத்தல்.
ஷென்சோவ் விண்கலத்தின் மூலம் 3 பேரை விண்ணிற்கு அனுப்பிய சீனா.இந்நிலையில், விண்வெளி ஆய்வு நிலையத்தை வீரர்கள் சென்றடைந்ததாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் பைடனின் நிர்வாகம் செயல்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இலினாய்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
ஐபிஎல் லீக் போட்டியில் ஐதராபாத்தை 35 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெங்களூரு அணி. இந்நிலையில், 20 பந்துகளில் 50 ரன்கள் விளாசிய ரஜத் பட்டிதார் ஆட்டநாயகனாக தேர்வு.