தமிழ்நாடு, புதுச்சேரியின் 40 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளில் காலை 7 மணி முதல் ஜனநாயகத் திருவிழாவான வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது.
தமிழ்நாட்டில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஏற்பாடுகள் தயார் உள்ளது. இந்நிலையில், சென்னையில் அதிகாலையிலேயே மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது.
தமிழ்நாட்டில் 8 ஆயிரத்து 50 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டநிலையில், பாதுகாப்பு பணியில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி பேட்டியளித்துள்ளார்.
வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளை இணையதளம் மூலமாக அறிந்து கொள்ளவும், வாக்குச்சாவடியில் கூட்டம் இருக்கிறதா? என்பதையும் தெரிந்து கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் விளக்கம்.
வாக்குச்சாவடிகளில் திமுக முகவர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என கட்சித் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.
“அதிமுக தலைவர்களின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக புகாரளித்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில், உளவுத்துறை அதிகாரிகள் அடியாள் வேலை செய்துவருகின்றனர்” - அதிமுகவின் இன்பதுரை குற்றச்சாட்டு.
கோவையில் திமுக மற்றும் அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்வதாக பாஜகவினர் புகார். மேலும், அண்ணாமலையின் ஆதரவாளர்கள்தான் ஜி-பே மூலம் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதாக திமுக குற்றச்சாட்டு.
மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் பொதுமக்கள் போராட்டம். சொந்த ஊர்களுக்கு செல்ல போதிய பேருந்து வசதி இல்லை என குற்றச்சாட்டு.
திருப்பூரில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு .இந்நிலையில், பேருந்துகளை சிறைபிடித்து போராட்டம்.
கடினமான மலைப்பாதைகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு சென்ற தேர்தல் அதிகாரிகள் வாக்குச்சாவடிகளுக்கு குதிரைகளில் கொண்டு செல்லப்பட்ட இயந்திரங்கள்.
அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மாநிலங்களில் மக்களவை தேர்தலுடன் இன்று சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. ஆகவே, அமைதியான முறையில் தேர்தலை நடத்த நடவடிக்கை.
டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ அமனத்துல்லா வக்பு வாரிய முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை.
ஐபிஎல் லீக் போட்டியில் மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது மும்பை அணி. இறுதிவரை போராடி வெற்றியை பறிகொடுத்தது பஞ்சாப்.
ஐபிஎல் தொடரில் வெற்றி வேட்டையை தொடருமா சிஎஸ்கே? அணி. லக்னோ அணிகள் இன்றிரவு பலப்பரீட்சை.