தமிழகத்துக்கு ஐந்தாயிரம் கோடி ரூபாய் நிதி கொடுத்ததற்கு கந்துவட்டி காரர் போல் கணக்கு கேட்கிறார் நிர்மலா சீதாராமன் என திருவண்ணாமலை பரப்புரை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.
திமுக அரசில் அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது என நாமக்கல் அதிமுக பொதுக்கூட்டத்தில் இபிஎஸ் குற்றச்சாட்டு.
தனக்கு உதவியவர்களுக்கு துரோகம் செய்வதே எடப்பாடி பழனிசாமியின் வழக்கம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
கச்சத்தீவு ஒப்பந்தத்தின் போது தமிழகத்துக்கு காங்கிரஸ் துரோகம் செய்தது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சனம்.
இந்தியை திணித்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருப்பது ஏன்? என திமுகவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
கச்சத்தீவு விவகாரத்தில் நேரடியாக விவாதிக்க தயார் என அண்ணாமலைக்கு சவால்விட்ட செல்வபெருந்தகை.
“கூட்டணியில் சேர வேண்டும் என பாஜக தரப்பில் நிர்பந்தம் கொடுக்கப்பட்டது. வங்கிக் கணக்கை முடக்கி மிரட்டினர்” என பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு.
தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லும் பணி நிறைவு. மேலும், பணப்பட்டுவாடாவை தடுக்க கூடுதல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சத்யபிரதா சாகு விளக்கமளித்துள்ளார்.
தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தமிழகம் வர உள்ளார். வரும் 9,10 மற்றும் 13, 14ஆம் தேதிகளில் 6 தொகுதிகளுக்கு சுற்றுப்பயணம்.
பரப்புரைக்காக வரும் 12 ஆம்தேதி தமிழகம் வருகிறார் ராகுல்காந்தி.மேலும், கோவையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சருடன் இணைந்து வாக்கு சேகரிக்கிறார்.
சாதியை மீண்டும் தூக்கிபிடிப்போரை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என திருமாவளவனை ஆதரித்து சிதம்பரம் தொகுதியில் கமல் பரப்புரை.
மைக் சின்னத்தை மக்களிடம் கொண்டுசேர்க்கும் நாம் தமிழர் கட்சி... மம்பட்டியான் திரைப்பட பாடல் வரிகளை மாற்றி பாடியபடி சீமான் பரப்புரை.
“முதலமைச்சர் ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமியும் சமூக நீதிக்காக செய்தது என்ன?” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
“சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாத பாஜகவுடன் ஏன் கூட்டணி வைத்தீர்கள்?” என பரப்புரையில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணியிடம் கேள்வி கேட்ட இளைஞர்.
“5 ஆண்டுகளாக எங்கே போனீர்கள்?” என வேலூர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்திடம் கேட்ட மக்கள்... இதையடுத்து மக்களுக்கும் திமுக எம்.எல்.ஏக்கும் இடையே வாக்குவாதம்.
புதுக்கோட்டை விராலிமலையில் வாகன சோதனையில் சிக்கிய 4 கோடி மதிப்புள்ள நகைகள், உரிய ஆவணங்கள் இல்லாததால் அரசு கருவூலத்தில் ஒப்படைப்பு.
மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம். இதனால். பாதுகாப்பு கருதி 7 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
பொன்னேரியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 தொழிலாளர்கள் பெயிண்டிங் வேலையை முடித்து சொந்த ஊருக்கு திரும்பியபோது ரயில் மோதி உயிரிழப்பு.
தேனியில் காதல் திருமணம் செய்த இளைஞருக்கு 21 வயது ஆகவில்லை எனக்கூறி பிரித்துவைத்த காவல்துறை. இதனால், மனமுடைந்த புதுப்பெண் தற்கொலை - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
கேரளா திருச்சூர் ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டு டிக்கெட் பரிசோதகர் கொலை செய்த வழக்கில் மதுபோதையில் விபரீத செயலில் ஈடுபட்டவர் கைது.
நாட்டை கொள்ளையடித்தாலும், தேர்தல் நேரம் என்றால் கைது செய்யக்கூடாது என்பதா? என கைது நடவடிக்கையை எதிர்த்து கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறை தரப்பு வாதம்.
அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தை தாக்கிய சூறாவளி. தலைகுப்புற கவிழ்ந்த கார்கள்; காற்றில் பறந்த வீட்டின் கூரைகள்
ஐபிஎல் போட்டியில் ரன்மழை பொழிந்த கொல்கத்தா அணி. 272 ரன்கள் எடுத்த நிலையில், டெல்லி அணியை 106 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்.
ஐபிஎல் போட்டியில் மல்லுக்கட்டும் குஜராத் - பஞ்சாப் அணிகள் அகமதாபாத் மைதானத்தில் இன்றிரவு பலப்பரீட்சை.
ஹர்திக் பாண்டியா தலைமை மீது ரோகித் சர்மா கடும் அதிருப்தி. நடப்பு சீசனுடன் மும்பை அணியில் இருந்து ரோகித் சர்மா விலக உள்ளதாக தகவல்.