காலை தலைப்புச் செய்திகள் | திமுக, அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு முதல் இளையராஜா பயோபிக் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது பொன்முடியின் பதவி பிரமாணம் தொடர்பான வழக்கு முதல் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தின் முதல் பார்வை வெளியீடு வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.
இபிஎஸ் - மு.க.ஸ்டாலின் - தனுஷ் - இளையராஜா
இபிஎஸ் - மு.க.ஸ்டாலின் - தனுஷ் - இளையராஜாபுதிய தலைமுறை
Published on

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்

  • பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்துவைக்குமாறு ஆளுநருக்கு உத்தரவிடக்கோரிய வழக்கு தொடரப்பட்டுள்ளது.

  • மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 21 வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்தது திமுக. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 500 ரூபாயாக குறைக்கப்படும் என்றும் பெட்ரோல், டீசல் விலையும் குறைக்கப்படும் எனவும் திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு.

இபிஎஸ் - மு.க.ஸ்டாலின் - தனுஷ் - இளையராஜா
மக்களவை தேர்தல் 2024 | திமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்!
  • 2019, 2021 தேர்தலில் அளித்த வாக்குறுதிகளையே திமுக நிறைவேற்றவில்லை என எடப்பாடி பழனிசாமியும், திமுகவின் தேர்தல் அறிக்கை வெறும் காகிதம்தான் என்று அண்ணாமலையும் கருத்து தெரிவித்துள்ளனர்.

  • தேர்தல் பரப்புரையை நாளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கும் நிலையில், ஏப்ரல் 17 வரை 40 தொகுதிகளிலும் வாக்கு சேகரிக்கிறார்.

  • அதிமுகவில் முதற்கட்டமாக 16 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், இரண்டாம்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி.

இபிஎஸ் - மு.க.ஸ்டாலின் - தனுஷ் - இளையராஜா
திடீரென அதிமுக வேட்பாளர்களை இ.பி.எஸ் அறிவித்தது ஏன்? வேட்பாளர் தேர்வில் ஓங்கிய வேலுமணியின் கை!
  • அதிமுக கூட்டணியில் தேமுதிக-வுக்கு திருவள்ளூர், மத்திய சென்னை, கடலூர், விருதுநகர், தஞ்சாவூர் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், 2026ஆம் ஆண்டிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்று பிரேமலதா விஜயகாந்த் பேட்டியளித்துள்ளார்.

அதிமுக - தேமுதிக கூட்டணி | மக்களவை தேர்தல் 2024
அதிமுக - தேமுதிக கூட்டணி | மக்களவை தேர்தல் 2024
  • டிடிவி தினகரனின் அமமுக-வுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கீடு செய்து தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

  • பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் ஒபிஎஸ்-க்கு தொகுதிகள் ஒதுக்குவதில் இழுபறி ஏற்பட்டு வரும் நிலையில், இன்றுக்குள் கூட்டணியை இறுதி செய்ய தீவிர பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

  • காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் இன்று இரவுக்குள் வெளியிடப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

Selvaperunthagai
Selvaperunthagaipt
  • கோவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உட்பட 4 பேர் தற்கொலை செய்துள்ளனர். இந்நிலையில் தற்கொலைக்காண காரணம் கடன் பிரச்னையால் விபரீத முடிவா என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றன

  • தமிழர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் ஷோபா மீது நடவடிக்கை எடுக்க கர்நாடகா தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது

இபிஎஸ் - மு.க.ஸ்டாலின் - தனுஷ் - இளையராஜா
தமிழர்கள் பற்றி சர்ச்சை பேச்சு: மத்திய இணையமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவு!
  • கர்நாடக இசை பாடகர் டி.எம் கிருஷ்ணாவிற்கு சங்கீத கலாநிதி விருது அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மியூசிக் அகாடமி கச்சேரிகளில் இனி கலந்து கொள்ளப்போவது இல்லை என ரஞ்சனி- காயத்ரி சகோதரிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

  • தேர்தல் பத்திரம் தொடர்பான அனைத்து விவரங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்ட விவகாரத்தில் பாரத ஸ்டேட் வங்கிக்கு உச்சநீதிமன்றம் அளித்த கெடு இன்று மாலையுடன் நிறைவடைகிறது.

  • தேர்தல் பரப்புரைகளில் மதரீதியில் ராகுல் காந்தி பேசி வருகிறார் என தேர்தல் ஆணையத்திற்கு பாஜக புகார் கடிதம் அளித்துள்ளது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி
  • மணிப்பூரில் தொடரும் வன்முறைகள்... காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்திய கொடூரம்.

  • இந்தோனேசியாவில் ஒரு மாதத்திற்கு பிறகு வெளியானது பொதுத்தேர்தல் முடிவுகள். இதில், 58 விழுக்காடு வாக்குகளை பெற்று அதிபராகிறார் பிரபோவோ.

  • அர்ஜெண்டினாவில் 200 விழுக்காடு அதிகரித்த டெங்கு பாதிப்பு காரணமாக நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.

  • 17வது ஐபிஎல் தொடர் சென்னையில் நாளை தொடங்கவுள்ளநிலையில், முதல் போட்டிக்காக சிஎஸ்கே - பெங்களூரு அணி வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டநிலையில் அதனை இணையத்தில் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

  • கேரளா திருவனந்தபுரத்தில் GOAT படப்பிடிப்பு தளத்தில் குவியும் ரசிகர்களிடம் மலையாளத்தில் பேசி உற்சாகப்படுத்தினார் நடிகர் விஜய்.

  • மத்திய பிரதேசத்தில் நடிகர் அஜித் குமார் பைக் பயணம் மேற்கொண்ட போது சக நண்பர்களுக்கு அறிவுரை வழங்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

  • இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கிறார் தனுஷ். இப்படத்தினை அருண் மாதேஸ்வரன் இயக்கும் நிலையில், படத்தின் முதல் பார்வை நேற்று வெளியிடப்பட்டது.

இபிஎஸ் - மு.க.ஸ்டாலின் - தனுஷ் - இளையராஜா
“இளையராஜாவாக நடிப்பது எனக்கு சவாலாக தெரியவில்லை” - பயோபிக் அறிமுக விழாவில் தனுஷ் நெகிழ்ச்சி #Video

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com