காலை தலைப்புச் செய்திகள் | சிஏஏ அமல் முதல் நடிகர் விஜய்யின் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது தேசிய குடியுரிமை திருத்தச்சட்டம் முதல் நடிகர் விஜய்யின் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வரை பல முக்கிய செய்திகலை விவரிக்கிறது.
காலை தலைப்புச் செய்திகள்
காலை தலைப்புச் செய்திகள்முகநூல்
Published on

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்

  • அரசிதழில் அறிவிக்கையை வெளியிட்டு நாடு முழுவதும் அமலுக்கு வந்தது தேசிய குடியுரிமை திருத்தச்சட்டம்.

  • குடியுரிமை திருத்த சட்டத்தால் சிறுபான்மையினருக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளதாக அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார்.

    பிரதமரின் அப்பட்டமான பொய்களுக்கு மற்றொரு நிரூபணம் என காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது

காலை தலைப்புச் செய்திகள்
அமலுக்கு வந்தது குடியுரிமை திருத்தச் சட்டம்; சொன்னபடி நிறைவேற்றியது மத்திய அரசு! சட்டம் சொல்வதுஎன்ன?
குடியுரிமை திருத்தச் சட்டம்
குடியுரிமை திருத்தச் சட்டம்முகநூல்
  • குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்ததை வரவேற்று கொல்கத்தாவில் கங்கா ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தினர்.

  • பிளவுமிகு சட்டத்தை கொண்டுவந்த பாஜகவிற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சனம் தெரிவித்துள்ளார்.

  • மத்திய அரசு மாபெரும் வரலாற்று பிழையை செய்துள்ளதாக இபிஎஸ் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

  • தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை இன்று மாலைக்குள் வழங்க வேண்டும் என பாரத ஸ்டேட் வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

  • முன்னாள் அமைச்சர் பொன்முடியின் சிறை தண்டனையை நிறுத்தி வைத்தது உச்சநீதிமன்றம். இதனால், மீண்டும் திருக்கோவிலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக வாய்ப்புள்ளதாக தகவல்.

காலை தலைப்புச் செய்திகள்
மீண்டும் எம்.எல்.ஏ ஆகிறாரா பொன்முடி? வழக்கின் தண்டனையை நிறுத்திவைத்த உச்சநீதிமன்றம்!
பொன்முடி
பொன்முடிட்விட்டர்
  • பாரதிய ஜனதா கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சிக்கு பெரம்பலூர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே, தாமரை சின்னத்தில் போட்டியிடப் போவதாக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் பேட்டி அளித்துள்ளார்.

  • மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கப்படும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உறுதி தெரிவித்துள்ளார்.

  • குழந்தைகள் அடங்கிய ஆபாச படங்களை பார்ப்பது குற்றமல்ல என கூறிய உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து, தமிழக காவல்துறை பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

  • புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், உடற்கூராய்வு அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்PT
  • பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தலைமறைவான முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாசை பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படை ஒடிசா விரைந்தது.

  • சென்னை விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் இருசக்கர வாகனங்களை திருடிய 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக காவல்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

  • புனைவுகள் அல்லாத மொழிபெயர்ப்புகளுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதை வென்ற கண்ணையன் தட்சிணாமூர்த்தி புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்துள்ளார்.

  • பிறை தென்பட்டதால் தமிழகத்தில் ரமலான் நோன்பு தொடங்கியுள்ளனர். இதனால், பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்த தொடங்கியுள்ளனர்.

  • சேலத்தில் 15ஆம் தேதி நடைபெறவிருந்த பொதுக்கூட்டம் 19ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதனால், பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக பயணத் திட்டத்தில் மாற்றம் என தகவல் வெளியாகிறது.

  • ஆந்திராவில் தெலுங்கு தேசம் - பாஜக - ஜனசேனா மெகா கூட்டணி என 3 கட்சிகளுக்கும் இடையே தொகுதி பங்கீடு நிறைவு பெற்றுள்ளது.

  • இலங்கை சிறையில் உள்ள 22 தமிழக மீனவர்களை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

  • “தாய்மார்களுக்கு ஆயிரம் ரூபாய் பிச்சை போட்டுவிட்டால் ஓட்டு போட்டுவிடுவார்களா....?” என மகளிர் உரிமைத் தொகை குறித்து பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்புவின் பேச்சால் சர்ச்சை எழுந்துள்ளது.

  • தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பிறகு போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

அண்ணாமலை
அண்ணாமலைpt web
  • எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.அதில்,இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தக்கூடாது என்ற புகாருக்கு பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  • பத்மஸ்ரீ சின்னபிள்ளைக்கு வீடு கட்டும் பணிகள் தொடக்கப்படவுள்ளதாகவும், இது 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகள் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • ஒரே நேரத்தில் பல அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கக் கூடிய அக்னி - 5 ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளதை அடுத்து டி.ஆர்.டி.ஓ-வுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

  • கர்நாடகா மாநிலத்தில் மிளகாய் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால். வேளாண் விளைபொருள் சந்தை கட்டடம் சூறையாடப்படுகிறது.இதனால், வாகனங்களுக்கு தீ வைத்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

  • அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால், டி20 உலகக்கோப்பையில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி விலகியுள்ளார்.

  • தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிக்கு ஒரு கோடி ரூபாயை நிதியுதவியாக வழங்கியுள்ளார் நடிகர் விஜய்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com