தமிழக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார்.
தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கைக்கான முத்திரை சின்னத்தை வெளியிட்டது. மாபெரும் 7 தமிழ்க்கனவு என்ற தலைப்பில் அமைகின்றன பட்ஜெட்டின் சாராம்சங்கள்.
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை தேவை என்று பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்.
I.N.D.I.A. கூட்டணி உருவாக காரணமாக இருந்தவர் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எனவும், வாக்கு வங்கி தங்கள் கூட்டணியிடமே இருப்பதாகவும் டி.ஆர்.பாலு பேச்சு.
“பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக பிரிந்ததும் சிறுபான்மை வாக்குகளை கவர முதலமைச்சர் ஸ்டாலின் முயற்சிக்கிறார்” என சீர்காழியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.
“பாஜக கூட்டணியில் இருந்தபோது குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்துவிட்டு இப்போது எதிர்ப்பதாக கூறுகிறது அதிமுக” என நெல்லையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு.
மக்களவை தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் விருப்ப மனு விநியோகம் இன்று தொடக்கம். விண்ணப்பத்தை சமர்ப்பிக்க மார்ச் 7ம் தேதி கடைசி நாள்.
காங்கிரஸ் கட்சிக்கான தொகுதி ஒதுக்கீட்டில் கை சின்னத்தில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட உள்ளதாக தகவல். பாஜக - தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி அறிவிப்பும் விரைவில் வெளியாகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் 60,567 நபர்களுக்கு அரசு பணி வழங்கப்பட்டுள்ளது என துறைவாரியான விவரங்களை வெளியிட்டு தமிழக அரசு விளக்கம்.
விருதுநகர் வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலை விபத்தில் 10 பேர் உயிரிழந்த விவகாரத்தில் பட்டாசு ஆலை மேலாளரை கைது செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
கிருஷ்ணகிரி அருகே அடுத்தடுத்து பொதுமக்களை தாக்கும் ஒற்றை காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறை திட்டமிட்டுள்ளனர்.
பர்கூர் அருகே வைக்கோல் ஏற்றிச் சென்ற வாகனத்தில் பற்றிய தீயில் நல்வாய்ப்பாக உயிர் தப்பிய ஓட்டுநர்.
குறைந்த பட்ச ஆதார விலை தொடர்பாக ஐந்தாண்டு திட்டத்தை முன்மொழிந்த மத்திய அரசு. விவசாயிகளுடன் சுமூக நிலையை ஏற்படுத்த நடவடிக்கை.
விவசாயிகளின் பேரணி மற்றும் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசின் பரிந்துரைகள் குறித்து விவாதித்து முடிவெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த 100 நாட்களில் அனைவரின் நம்பிக்கையையும் பெற வேண்டும் என பாஜக தொண்டர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்.
பாஜக ஆட்சியில் வேலைவாய்ப்புக்காக இளைஞர்கள் போராடும் நிலை உள்ளதாக ராகுல்காந்தி குற்றச்சாட்டு. மேலும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்தான் இளைஞர்களின் கனவு நிறைவேறும் எனவும் உறுதியளித்துள்ளார்.
“காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத், பாஜகவில் இணைவதாக வெளியான தகவல் வதந்தியே” - மத்தியப்பிரதேச காங்கிரஸ் மாநில தலைவர் ஜித்தேந்திர பத்வாரி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் இன்று விஜய்யின் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தொடங்குகிறது. உறுப்பினர் சேர்க்கை, உட்கட்சி கட்டமைப்பு குறித்து ஆலோசிக்க வாய்ப்பு.
மேயர் தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் சண்டிகர் மாநகராட்சி மேயர் பதவியை ராஜினாமா செய்தார் மனோஜ் சோன்கர்.
கேரள மாநிலம் மட்டன்னூரில் ஆளுநர் ஆரிஃப் முகமது கானுக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்.எப்.ஐ மாணவர் அமைப்பினர் கைது.
பெங்களூருவில் வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதில் 3 பேர் உயிரிழப்பு. மேலும் 5 பேர் காயம்.
இயற்கை சீற்றத்தில் சிக்கித்தவித்த சீனாவில் மணல் புயல் மற்றும் பனிப்புயலால் வீடுகளில் முடங்கிய மக்கள்.
பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் முறைகேடு என புகார். விசாரணை நடத்த குழுவை அமைத்தது தேர்தல் ஆணையம்.
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி வரலாற்று வெற்றி. 434 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல்.
ஆசிய பேட்மிண்டன் தொடரை முதன்முறையாக வென்று இந்திய மகளிர் அணி சாதனை. இறுதிப்போட்டியில் தாய்லாந்து அணியை வென்று அசத்தல்.