காலை தலைப்புச் செய்திகள்|சாதிவாரி கணக்கெடுப்பு | கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது சாதிவாரி கணக்கெடுப்பு முதல் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
காலை தலைப்புச் செய்திகள்
காலை தலைப்புச் செய்திகள்முகநூல்
Published on

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்|

  • கடற்கொள்ளையரிடம் சிக்கிக்கொண்ட ஈரான் நாட்டு மீன்பிடி கப்பலை மீட்டு,கப்பல் மாலுமிகளாக இருந்த 23 பாகிஸ்தானியர்களை விடுவித்தது இந்திய கடற்படை.

  • வேட்டையாடு விளையாடு, வடசென்னை, பொல்லாதவன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகர் டேனியல் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காலமானார்.

  • திமுக அரசு மீதான மக்களின் கோபம் தேர்தலில் எதிரொலிக்கும் என தமிழக பாஜக நிர்வாகிகளுடனான கலந்துரையாடலில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு.

  • சமூக நீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கைக்கோர்த்த மர்மம் என்ன? .சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ராமதாசுக்கு மோடி உறுதி அளித்தாரா என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

  • ஆசைவார்த்தைகள் கூறி மக்களை ஏமாற்றி அரசு அமைத்துவிட்டது எனவும், திமுக நீட் தேர்வை நீக்க இதுவரை செய்தது என்ன எனவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

  • மக்களவைத் தேர்தலை கவுன்சிலர்களுக்கான தேர்தல் என நினைத்து அதிமுக பரப்புரையில் ஈடுபட்டுள்ளது என பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

  • கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அமைச்சர் முன்னிலையில் விடுதலை சிறுத்தை கட்சியினர் மோதலில் ஈடுபட்டனர். நாற்காலிகளை தூக்கி வீசியதால் சிதறி ஓடிய கூட்டணி கட்சியினர்.

  • தமிழகத்தில் மீண்டும் இந்தியை மத்திய அரசு திணிப்பதாகவும், அப்படி இந்தியை திணித்தால் நடப்பதே வேறு என்றும் மநீம தலைவர் கமல்ஹாசன் ஆவேசம்.

  • ஜிஎஸ்டி காரணமாக கோவையில் ஏராளமான பஞ்சாலைகள், சிறு, குறு ஆலைகள் மூடப்பட்டுள்ளது என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

  • நெல்லையில் ஒருபுறம் இந்தியில் பேசி வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் , மற்றொரு புறம் 4 மொழிகளில் பேசி ஆதரவு திரட்டிய நாகை அதிமுக வேட்பாளர் சுர்ஜித் சங்கர்.

  • ஆரத்தி பணம் கொடுத்தது தொடர்பான வீடியோ கடந்தாண்டு எடுக்கப்பட்டது என அண்ணாமலை விளக்கம். இந்நிலையில், தவறான தகவல் அளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

  • சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அரசின் அனுமதியில்லாமல் நடைபெற்ற மஞ்சுவிரட்டினால், மாடு முட்டியதில் பார்வையாளராக நின்றிருந்த இளைஞர் உயிரிழந்தார்.

  • ஈரோட்டில் மநீம தலைவர் கமல்ஹாசன் பரப்புரையின் போது வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டதாக புகார். வீடியோக்கள் குறித்து காவல்துறை விசாரணை நடத்துவதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி விளக்கமளித்துள்ளார்.

  • தமிழ்நாட்டில் 4 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத் தேர்வுகள் ரமலான் பண்டிகையையொட்டி மாற்றம் செய்யப்பட்டுள்ளது என பள்ளி கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

  • புதுச்சேரியில் சிறை வளாகத்தில் செல்போன், கஞ்சா உள்ளிட்டவற்றுடன் பார்சல் கண்டுபிடிக்கப்பட்டநிலையில், சிறை வளாகத்திற்குள் வீசியது யார் என்பது குறித்து காவல்துறை விசாரணை நடத்திவருகிறது.

  • சுமார் ஒரு டன் சந்தனக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டநிலையில், சந்தனமரக்கட்டைகள் கடத்தியதாக புதிய பாரதம் கட்சி நிர்வாகி உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  • காங்கிரஸ் கட்சி 1,823 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பிய நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு ஜனநாயகத்தை சீர்குலைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.

  • பழைய பான் எண்ணை பயன்படுத்தியதால் 11 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை செலுத்த கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

  • பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் தேடப்பட்டு வரும் இருவரின் புகைப்படங்கள் வெளியீடப்பட்டுள்ளநிலையில், தகவல் தெரிவிப்போருக்கு 10 லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என NIA அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

  • பெங்களூரு அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐபிஎல் தொடரில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com