இன்றைய காலை தலைப்புச்செய்திகள்|மத்திய அரசின் வெள்ளை அறிக்கை முதல் உத்தராகாண்டில் வெடித்த வன்முறை வரை

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது மத்திய அரசின் வெள்ளை அறிக்கை முதல் இன்று வெளியாகிறது லால் சலாம் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்முகநூல்
Published on
  • கடந்த மன்மோகன் சிங் அரசு பொருளாதார கொள்கை முடிவுகளை எடுக்க முடியாமல் திணறியது. ஆட்சியில் தவறான வழி நடத்தல், நிதி சீர்கேடு, ஊழல் என மத்திய அரசு வெள்ளை அறிக்கை தாக்கல்.

  • பத்தாண்டு கால பாரதிய ஜனதா ஆட்சியில் விலைவாசி உயர்வு. வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு. கறுப்பு அறிக்கை வெளியிட்டது காங்கிரஸ்.

  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 33 மாத ஆட்சியில் எட்டரை லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்ப்பு. பட்டியலை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.

  • செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் கல்வித்துறையில் பெரிய மாற்றம் வரும். சென்னையில் கணித்தமிழ் மாநாட்டில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு.

  • தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை. முக்கிய ஆவணங்கள், போலி ஆதார்அட்டைகள், செல்போன்கள் பறிமுதல்.

  • கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாக்க அனைவரும் இணைந்து போராட வேண்டும். டெல்லியில் மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேச்சு.

  • 6 லட்சம் கோடி ரூபாய் வரி கொடுத்த தமிழகத்துக்கு வரி பகிர்வாக 1.58 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே கிடைத்தது. மத்திய அரசு மீது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு.

  • தமிழகத்திற்கான மானியம் 300 மடங்கு அதிகரிப்பு. மாநிலங்களவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்.

  • அமைச்சர் செந்தில் பாலாஜி பெற்றோரிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை. அமைச்சரின் சகோதரர் குறித்து அதிகாரிகள் தகவல் சேகரிப்பு.

  • பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதில் தாமதம். முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சி முன்னிலை வகிப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தகவல்.

  • லாகூர் தொகுதியில் போட்டியிட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் பின்னடைவு. இம்ரான் கான் கட்சி வேட்பாளர் முன்னிலை வகிப்பதாக தகவல்.

  • தமிழ்நாட்டில் 39 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றும். இந்தியா டுடே-சி வோட்டர் கருத்துக்கணிப்பு.

  • உத்தரபிரதேசத்தில் பாஜக 70 தொகுதிகளிலும், சமாஜ்வாதி 7 தொகுதிகளிலும் வெல்லும் எனக் கணிப்பு. பீகாரில் பாஜக கூட்டணி 32 இடங்களிலும், இந்தியா கூட்டணி 8 இடங்களிலும் வெல்லும் என யூகம்.

  • மக்களவைத் தேர்தலில் நிச்சயம் சிறப்பான கூட்டணி அமைக்கப்படும்.. நாமக்கல்லில் கட்சி நிர்வாகிகளிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதி

  • சென்னைப் பல்கலைக்கழகத்தின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக தகவல்..

  • சென்னையில் 13 கல்வி நிறுவனங்களுக்கு ஒரே நேரத்தில் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல். ஒரே மெயில் ஐடியில் இருந்து மிரட்டல் விடுத்தவர் குறித்து விசாரிக்கும் குற்றத்தடுப்புப் பிரிவு.

  • மதுரை உசிலம்பட்டி அருகே எலிக் காய்ச்சல். பாதிக்கப்பட்ட 10க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை.

  • பஞ்சுமிட்டாயில் ஆபத்தை விளைவிக்கும் ரசாயனம் கலப்பதாக புதிய தலைமுறை வெளியிட்ட செய்தி எதிரொலி.

  • சென்னை, புதுச்சேரியில் உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு.

  • கேரளாவில் கோயில் யானைகள் அடித்து துன்புறுத்தல். இரண்டு பாகன்களை சஸ்பெண்ட் செய்தது குருவாயூர் கோயில் நிர்வாகம்.

  • இழப்பீடு தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தல்.

  • உத்தராகண்ட் மாநிலத்தில் மதரசா இடிக்கப்பட்டதால் வன்முறை. வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதால் பதற்றம்.

  • பாரிஸில் நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடருக்கான பதக்கங்கள் அறிமுகம்.ஈஃபிள் டவரின் உலோகத்தை பயன்படுத்தி தயாரித்துள்ள பிரான்ஸ் அரசு

  • 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா முன்னேற்றம். பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்.

  • ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை 40 ஓவர்களாக குறைக்கலாம். ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆரோன் பின்ச் ஆலோசனை.

  • ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள லால் சலாம் திரைப்படம். திரையரங்குகளில் இன்று வெளியாகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com