காலை தலைப்புச் செய்திகள் | பிரதமர் மோடியின் உரை முதல் ஸ்பெயின் தமிழர்களுக்கு முதல்வரின் கோரிக்கை வரை

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது பிரதமர் மோடி முதல் சிலி நாட்டில் ஏற்பட்ட காட்டுத்தீ வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்puthiya thalaimurai
Published on

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்

  • மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெறும் என பிரதமர் மோடி உறுதி.

  • “முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு இந்தியர்களை சோம்பேறிகளாக கருதினார்” - என 1959ம் ஆண்டு சுதந்திர தினவிழா உரையை மேற்கோள் காட்டி மக்களவையில் பிரதமர் மோடி விமர்சனம்.

  • “தேசிய அளவில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த அச்சம் ஏன்?” - பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கேள்வி.

  • நாடாளுமன்றத் தொகுதி வாரியாக கடந்த 13 நாட்களாக நடைபெற்ற திமுக நிர்வாகிகள் கூட்டம் நிறைவு. மொத்தம் 3,405 பேரிடம் இருந்து களநிலவரம் குறித்து கேட்டறிந்ததாக தகவல்.

  • “தாய் மண்ணான தமிழ்நாட்டுக்கு இயன்ற உதவிகளை செய்ய வேண்டும்..” - ஸ்பெயின் வாழ் தமிழர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்.

ஸ்பெயின் நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஸ்பெயின் நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
  • தூத்துக்குடி மாவட்டத்தில் கருத்துகளை கேட்கும் திமுக தேர்தல் அறிக்கைக்குழு. மீண்டும் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுவது பற்றி முதல்வர் முடிவு செய்வார் என கனிமொழி எம். பி. பேட்டி.

  • “பாஜக மற்றும் திமுகவை எதிர்த்து போட்டியிட்டு அதிமுக வெற்றி பெறும்” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை.

  • ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரனுடன் பாஜக முதற்கட்ட கூட்டணி பேச்சுவார்த்தை. அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும் எனத் தகவல்.

  • “மக்களவை தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவோம். சின்னம் தங்களுக்கு கிடைக்கும் என்று நம்புகிறோம்” - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி.

  • அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையை நாளைய தினத்துக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.

  • மகளின் நினைவாக 7 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை அரசுக்கு தானம் தந்த மூதாட்டி பூரணம் அம்மாள், மேலும் 91 சென்ட் நிலத்தை அரசுப்பள்ளிக்கு கூடுதலாக வழங்கினார்.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
“விருது வாங்குனது ரொம்ப சந்தோஷம்...” - மகிழ்ச்சியில் திளைத்த ஆயி பூரணம் அம்மாள்
  • இமாச்சலப்பிரதேசத்தில் விபத்தில் சிக்கிய சைதை துரைசாமி மகனின் நிலை என்ன? சட்லெஜ் நதி உறைந்துள்ளதால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்.

  • திருப்பூரில் நூல் வியாபாரியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் என கூறி ஒரு கோடி ரூபாய் பறிப்பு. கட்டுக்கட்டாக பணம் பறிமுதல். 5 பேர் கைது.

  • அரியலூர் அருகே கார் மோதி பள்ளி மாணவன் உயிரிழப்பு. கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.

  • சென்னையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷிடம் மடிப்பிச்சை கேட்ட ஆசிரியை.... ஆசிரியர் பணிக்கான ஆணை வழங்கப்படவில்லை என புகார்.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
சென்னை | அமைச்சர் அன்பில் மகேஸிடம் மடியேந்தி யாசகம் கேட்ட ஆசிரியை – காரணம் என்ன?
  • சென்னை ஆவடி அருகே ஷேர் ஆட்டோவில் தீ விபத்து. நல்வாய்ப்பாக உயிர் தப்பிய பயணிகள்.

  • கர்நாடகாவில் குரங்கு காய்ச்சலுக்கு 2 பேர் உயிரிழப்பு... மாநிலம் முழுவதும் நோய் தொற்றால் இதுவரை 53 பேருக்கு பாதிப்பு...

  • ஆண்டிபட்டி வாரச்சந்தையில் ஒரு கிலோ வெள்ளை பூண்டு 500 ரூபாய்க்கு விற்பனை. விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இல்லத்தரசிகள் வலியுறுத்தல்.

  • கர்நாடகாவுக்கு உரிய நிதிபகிர்வு இல்லை என அம்மாநில துணை முதலமைச்சர் டி. கே.சிவக்குமார் குற்றச்சாட்டு... எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள், எம்பிக்கள் வரும் 7 ஆம் தேதி டெல்லியில் போராட்டம்.

  • ‘மாநிலங்களுக்கு நிதி ஓதுக்குவதில் எந்த பாகுபாடும் காட்டப்படுவதில்லை. குற்றச்சாட்டுகளில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது’ - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்.

  • லால் சலாம் திரைப்படத்தின் டிரைலர் வெளியானது. மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில், மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த்.

  • தேர்தல் பேரணி மற்றும் பரப்புரையில் சிறார்களை ஈடுபடுத்தக் கூடாது. அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்.

  • ‘சண்டிகர் மேயர் தேர்தல், ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல்’ - எனக்குறிப்பிட்டு, மேயர் கூட்டம் நடத்த தடை விதித்தது உச்சநீதிமன்றம்.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
”சண்டிகர் மேயர் தேர்தலில் நடந்தது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் சம்பவம்” - உச்ச நீதிமன்றம் கண்டனம்
  • இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸூக்கு புற்றுநோய் பாதிப்பு உறுதியாகியுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை நிர்வாகம் அறிவிப்பு.

  • சிலி நாட்டில் பேரழிவை ஏற்படுத்திய காட்டுத்தீ... 120-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com