காலை தலைப்புச் செய்திகள்| 75 ஆவது குடியரசு தின விழா முதல் பாடகி பவதாரணி மறைவு வரை

இன்றயை காலை தலைப்புச் செய்திகள்
இன்றயை காலை தலைப்புச் செய்திகள்
இன்றயை காலை தலைப்புச் செய்திகள்முகநூல்
Published on

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்:

  • நாட்டின் 75வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லி, சென்னை உள்பட நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்.

  • வளர்ச்சிக்கு அனைவரின் பங்களிப்பும் அவசியம் - குடியரசு தலைவர் திரெளபதி முர்மு உரை.

  • குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் பங்கேற்க வந்த பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுடன் பிரதமர் மோடி சந்திப்பு.

  • முன்னாள் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு பத்ம விபூஷண் விருது அறிவித்தது மத்திய அரசு.

  • மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு பத்ம பூஷண் விருது.

  • தமிழக முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி, பின்னணி பாடகி உஷா உதுப்பும் பத்ம பூஷண் விருதுக்கு தேர்வு.

  • வள்ளி கும்மியாட்ட கலைஞர் பத்ரப்பன், நாதஸ்வர கலைஞர் சேஷம்பட்டி சிவலிங்கம் பத்ம ஸ்ரீ விருது பெறுகின்றனர்.

  • பீகாரில் மீண்டும் புதிய கூட்டணியை உருவாக்குகிறார் நிதிஷ் குமார்... பாஜகவுடன் கைக்கோர்த்து முதலமைச்சராக இருப்பதாகவும் தகவல்.

  • “கொரோனாவை விட கொடியது பாரதிய ஜனதா அரசுதான்...” - ராமர் கோயிலைக்காட்டி மக்களை திசைத் திருப்புவதாக முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்.

  • “தமிழ்நாட்டிலும் எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A கூட்டணி கலைந்துவிடும்...” பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம்.

  • இசையமைப்பாளர் இளையராஜா மகள் பவதாரிணி காலமானார். புற்றுநோய்க்கு இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார்.

  • பவதாரிணியின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா மற்றும் பல அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்.

  • இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு ஆல்வுட்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com