அயோத்தியில் இன்று கோலாகலமாக நடைபெற உள்ளது ராமர் கோயில் கும்பாபிஷேகம். நண்பகல் 12.05 மணியளவில் பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சி தொடங்கும் என அறிவிப்பு.
கும்பாபிஷேக விழாவையொட்டி விழாக்கோலம் பூண்டது அயோத்தி நகரம். நாடு முழுவதும் மின்னொளியில் ஜொலிக்கும் திருத்தலங்கள்.
ராமர் கோயில் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் எட்டாயிரம் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்பு. அயோத்தி நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு.
தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்ய எந்த தடையும் விதிக்கவில்லை என தமிழ்நாடு அரசு விளக்கம்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆதாரமின்றி குற்றம்சாட்டுவதாக அமைச்சர் சேகர்பாபு விளக்கம்.
ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சியை புதுச்சேரியில் பொது இடங்களில் நேரலை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தகவல்.
“தமிழ்நாட்டின் வளத்துக்கும், நலத்துக்கும் பாஜக-வால் ஆபத்து வந்துள்ளது. பாஜக, அதிமுகவின் பகல் வேஷங்களை தடுப்பதுதான் நமது முதல் பணி” என்று சேலம் திமுக இளைஞரணி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
“இன்னும் இரண்டாயிரம் ஆண்டுகள் ஆனாலும் தமிழகத்தில் பாஜக கால் பதிக்க முடியாது. பத்து ஆண்டு கால பாசிச ஆட்சிக்கு முடிவுகட்ட படை தயார்” என்று சேலம் திமுக இளைஞரணி மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.
“வாக்களித்த மக்களை ஆட்சிக்கு வந்த பிறகு திமுக அரசு மறந்துவிட்டது” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.
பில்கிஸ் பானு வழக்கில் முன்கூட்டியே விடுவிக்கப்பட்ட 11 குற்றவாளிகளும் குஜராத் சிறையில் சரண் அடைந்துள்ளனர். கூடுதல் அவகாசம் வழங்க உச்சநீதிமன்றம் மறுத்ததால் மீண்டும் சிறைவாசம்.
மும்பையில் கடலுக்கு நடுவே அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட பாலத்தில் விபத்து. தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்த கார்.