மதுரையில் 15 நிமிடங்களில் 4 புள்ளி 5 சென்டி மீட்டர் மழை பொழிந்துள்ளது. 70 ஆண்டுகளுக்கு பிறகு அக்டோபர் மாதத்தில் 100 மில்லி மீட்டருக்கு மேல் மழைப்பொழிவு நிகழ்ந்துள்ளது.
கனமழையால் கண்மாய், ஓடைகள் உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்ததால் பெரிய பாதிப்பு ஏற்பட்டது. தடுப்புகள் அமைத்து தர வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மதுரையில் சீரமைப்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பாதிப்புகள் குறித்து அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியரிடம் கேட்டறிந்தார்.
திராவிட நல் திருநாடு என்று கூறினால் நாக்கு தீட்டாகிவிடுமா? என ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருச்சி மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில், கணக்கில் வராத 97 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தீபாவளியை ஒட்டி பட்டாசு கடைகளில் லஞ்சம் கேட்பதாக புகார் வந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
துணை முதலமைச்சர் உதயநிதி பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா என பல்வேறு கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்படவில்லை என துணைமுதலமைச்சர் உதயநிதி விளக்கம் அளித்துள்ளார். மைக் கோளாறால் பாடல் சரியாக கேட்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
சென்னை திருவொற்றியூரில் தனியார் பள்ளியில் வாயுக் கசிவு ஏற்பட்டு மாணவர்கள் மயக்கம் அடைந்தனர். அமோனியா கசிந்ததா என தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
தேங்காய் உள்ள இருமுடி பையுடன் சபரிமலை செல்லும் பக்தர்கள் விமானத்தில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி வரை தற்காலிக அனுமதி அளித்து விமானப்போக்குவரத்து அமைச்சகம் நடவடிக்கை.
காசி விஸ்வநாதர் கோயில் அருகே உள்ள ஞானவாபி மசூதியில் அகழ்வாய்வு செய்யக் கோரிய மனுவை நிராகரித்தது வாரணாசி விரைவு நீதிமன்றம். மேல் நீதிமன்றங்களின் உத்தரவுகளை சுட்டிக்காட்டி தீர்ப்பு வழங்கியுள்ளது.
உக்ரைன் மற்றும் மேற்கு ஆசியாவில் தொடரும் மோதல்கள் கவலையளிக்கிறது என்றும் அமைதி திரும்ப வேண்டும் என்றும் ஜெர்மனி பிரதமருடனான சந்திப்புக்கு பின் பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் பூர்வகுடிமக்களுக்கு அரசு இழைத்த அநீதிகளுக்காக அதிபர் பைடன் மன்னிப்பு கேட்டார். பூர்வகுடிகளுக்கான பள்ளிகளில் பாரம்பரியம் அடையாளங்கள் திட்டமிட்டே அழிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணியில் ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளனர். கேஎல் ராகுல், சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரல், பிரசித் கிருஷ்ணா ஆகியோருக்கும் 18 பேர் கொண்ட அணியில் இடமளிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனில் நீடிக்கும் போரால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதாக இந்தியா- ஜெர்மனி நாடுகள் கவலை சர்வதேச விதிகளுக்குட்பட்டு பிரச்னைக்கு தீர்வு காண இருநாட்டு பிரதமர்கள் கூட்டறிக்கை...
நாட்டில் பணவீக்கம் அதிகரிப்பது ஏழை மக்களை கடுமையாக பாதிக்கிறது என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
உஸ்பெகிஸ்தான் தேர்தல் ஆணையத்துடன் இந்திய தேர்தல் ஆணையம் ஒப்பந்தம்... தேர்தல் மேலாண்மை தொடர்பாக பரஸ்பரம் ஒத்துழைப்பு செய்வது தொடர்பாக இருதரப்பும் கையெழுத்து...
மகாராஷ்டிராவில் 5 தொகுதிகளை ஒதுக்காவிட்டால் தனித்து போட்டியிடுவோம் என மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கு சமாஜ்வாதி எச்சரிக்கை விடுத்துள்ளது.
லாலுவுக்கு பாரத் ரத்னா விருது வழங்கக்கோரி ராஷ்டீரிய ஜனதா தளம் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. பாரத ரத்னா விருதை களங்கப்படுத்த வேண்டாம் என ஐக்கிய ஜனதாதளம் விமர்சனம் செய்துள்ளது.