சென்னையில் இன்று காலை முதல் மீண்டும் தொடங்கிய மழையால் மழைநீர் ஆங்காங்கே தேங்கத்தொடங்கியது. இதன் காரணமாக, 5 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. அவை: கணேசபுரம், சுந்தரம் பாயின்ட், CB சாலை சுரங்கப்பாதைகள், ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை மற்றும் MRTS சுரங்கப்பாதை
நாளை அதிகாலை சென்னைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல். இன்றைய நிலவரத்தை பொறுத்தவரையில் காலை 10 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூரில் மிதமான மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு.
சென்னையில் இன்று பிற்பகல் முதல் தொடங்கும் கனமழை, நாளை காலை வரை தொடரும் என தனியார் வானிலை ஆய்வாளர் கணிப்பு. இருப்பினும் இன்று அதிகனமழை இருக்காது என்றும், கனமழை பெய்யக்கூடும் என்றும் கணிப்பு.
சென்னை உள்பட 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், சேலம், திருவண்ணாமலை உட்பட 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் அரசு, பொதுத் துறை நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை. ஆனால், அத்தியாவசிய சேவை துறைகள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிப்பு.
கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை. மேலும், காரைக்காலிலும் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நாள் முழுவதும் பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு. இந்நிலையில் வேளச்சேரியில் படகுகள் மூலம் மக்கள் மிட்கப்பட்டனர்.
சென்னையில் அதிகபட்சமாக மணலி புதுநகரில் 23 சென்டி மீட்டர் மழையும், கத்திவாக்கம், பெரம்பூரில் 21 சென்டி மீட்டர் மழையும் பெய்ததுள்ளது.
மேடவாக்கம், பள்ளிக்கரணை, புளியந்தோப்பு, பட்டாளம் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீர் வடியாததால் மக்கள் தவிப்பு.
சென்னை சூளைமேடு பகுதியில் வீடுகளை சூழ்ந்த வெள்ளநீர் காரணமாக, மின்மோட்டார்களை பயன்படுத்தியும் மழைநீர் வடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
கனமழை காரணமாக சென்னையில் இன்று 7 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. போடி, சப்தகிரி உள்ளிட்ட விரைவு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிப்பு.
கனமழையால் சென்னையில் ரயில் போக்குவரத்து பாதிப்பு. இந்நிலையில், ஆவடி ரயில் நிலையத்தில் மணிக்கணக்கில் மக்கள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.
வேளச்சேரி ஏஜிஎஸ் காலனியில் பத்துத்தெருக்களை சூழ்ந்த வெள்ளத்தின் காரணமாக, வீடுகளை விட்டு வெளியேற உதவி கோரியவர்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.
சென்னை அமைந்தகரை நெல்சன்மாணிக்கம் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பில் 150 மீட்டர் தொலைவுக்கு விரிசல் ஏற்பட்டுள்ளது. 10 அடிக்கு பள்ளம் ஏற்பட்டதால் குடியிருப்புவாசிகள் அச்சம்.
கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விழிப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும் என திமுக நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்.
மழை வெள்ள நிவாரணப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன என்று சென்னை ரிப்பன் மாளிகையில் ஆய்வு செய்த பின்னர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி.
சென்னையில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும் என எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.
மழை பாதிப்புகளை சரிசெய்ய, அனைத்து சாத்தியமான வழிகளிலும் தமிழக அரசு முயற்சி செய்துள்ளது என்றும், மழையை எதிர்கொள்ள அரசு தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு.
கனமழை தொடர்ந்து வரும் சூழலில் ட்ரோன் மூலம் உணவு, மருந்துப் பொருட்களை புறநகர் பகுதிகளில் பாதிக்கப்பட்ட இடங்களில் அளிக்க தமிழக அரசு முடிவு.
ஏழு இந்திய விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல். இந்நிலையில், அமெரிக்கா செல்லும் விமானம் கனடாவுக்கு திருப்பி விடப்பட்டது.
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 20ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.
இந்தியா கனடா மண்ணில் வன்முறையை தூண்டுவதை பொறுத்துக்கொள்ள மாட்டோம் என அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார். இருநாடுகள் உறவில் விரிசல் ஏற்பட்டிருப்பது கவலையளிப்பதாக அமெரிக்கா கருத்து.
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறியது மேற்கிந்திய தீவுகள் அணி. இங்கிலாந்துடனான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி.