தலைப்புச் செய்திகள் | அமெரிக்கா செல்லும் தமிழ்நாடு முதலமைச்சர் முதல் தொடரும் ரஷ்யா உக்ரைன் போர் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்திகளானது, இன்று அமெரிக்கா செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின் முதல் பதிலுக்கு பதில் தாக்குதல் நடத்தும் ரஷ்யா- உக்ரைன் வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்முகநூல்
Published on
  • அரசு முறை பயணமாக இன்று அமெரிக்கா செல்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தன் 17 நாட்கள் பயணத்தில் முன்னணி நிறுவனத் தலைவர்களை சந்திக்கத் திட்டமிட்டுள்ளார் முதல்வர்.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
கடந்த 3 ஆண்டுகளில் முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணங்களில் கையெழுத்தான ஒப்பந்தங்கள் என்னென்ன?
  • ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் - தேசிய மாநாட்டு கட்சி இடையே உடன்பாடு. கூட்டணியில் இருந்தாலும் 5 தொகுதிகளில் தோழமையுடன் ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டியிட முடிவு செய்துள்ளனர்.

  • ஜம்மு காஷ்மீர் தேர்தலில் பாஜக அறிவித்த வேட்பாளர்களுக்கு தொண்டர்கள் எதிர்ப்பு. இதனால் 44 பேர் கொண்ட பட்டியலை 16 பேர் கொண்ட பட்டியலாக குறைத்து வெளியிட்டுள்ளது பாஜக தலைமை.

  • “பல் போன நடிகர் எனும் விமர்சனத்தால் வருத்தமில்லை” என ரஜினினியும், “நகைச்சுவையை யாரும் பகைச்சுவையாக பயன்படுத்த வேண்டாம்” என்று அமைச்சர் துரைமுருகனும் கருத்து.

  • “மைக் கிடைத்தால் போதும், அண்ணாமலை பொய் பொய்யாகப் பேசுவார்” என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்தார். இதற்கு, பதிலுக்கு “இ.எம்.ஐ. முறையில் பதவி பெற்றார் இபிஎஸ்” என பல கடும் வார்த்தைகளை கூறி அண்ணாமலை பேச்சு.

  • மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் இன்று முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். தேயிலை தோட்டத்தை அரசே ஏற்று நடத்தவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

  • தென்காசி மாவட்டம் பண்பொழி குடியிருப்பு பகுதியை அச்சுறுத்திய காட்டு யானையை 15 மணி நேர போராட்டத்திற்கு பின் வனத்துறையினர் காட்டுக்குள் அனுப்பினர்.

  • திமுக எம்.பி. தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கிற்காக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜராக இருக்கிறார்.

  • புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பள்ளி மாணவர் சந்தேகத்துக்குரிய வகையில் உயிரிழப்பு. தூக்கில் தொங்கிய உடலில் காயங்கள் இருந்ததால் பல கேள்விகள் எழுந்துள்ளன.

மரணம்
மரணம்pt web
  • வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களின் சந்தேகம் முழுமையாக தீரும் வரை தேடுதல் பணி தொடரும் என கேரள வனத்துறை அமைச்சர் சசிதரன் உறுதி.

  • மலையாள திரையுலகை அதிர வைக்கும் பாலியல் குற்றச்சாட்டுகள்... மேலும் சில நடிகைகளும் நடந்த கொடுமைகளை வெளிப்படுத்தியதை அடுத்து, பரபரப்பு.

  • ரஷ்யாவில் 38 மாடி கட்டடத்தின் மீது டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், உக்ரைன் மீது ஏவுகணைகளை வீசி சரமாரி பதிலடி கொடுத்தது ரஷ்ய ராணுவம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com