இன்றைய காலை தலைப்புச் செய்திகள்|புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை-வெண்கலம் வென்ற அமன் ஷெராவத்

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, வெண்கலம் வென்ற அமன் ஷெராவத் முதல் வினேஷ் போகட் வழக்கில் இன்று தீர்ப்பு வரை உள்ளிட்ட செய்திகளை விவரிக்கிறது.
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்முகநூல்
Published on
  • எஸ்டி, எஸ்சி இடஒதுக்கீட்டில் "கிரீமிலேயர்" கிடையாது என உச்சநீதிமன்றத்தின் பரிந்துரையை நிராகரித்ததுள்ளது மோடி அமைச்சரவை.

  • பிரேசிலில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான பயணிகள் விமானம் கீழே விழுந்து தீப்பிடித்ததில் விமானத்தில் இருந்த 62 பேரும் உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது.

  • பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்தம் 57 கிலோ எடைப் பிரிவில் புவேர்ட்டோ ரிக்கோ வீரர் க்ரூசை வீழ்த்தி வெண்கலம் வென்றார் அமன் ஷெராவத். இந்நிலையில் , இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கலம் உறுதியாகியுள்ளது.

  • போட்டியில் பங்கேற்கும் முன் 10 மணி நேரத்தில் நான்கரை கிலோ எடையை குறைத்த அமன் ஷெராவத். இரவு முழுவதும் தூங்காமல் கடும் உடற்பயிற்சி மேற்கொண்டதாக தகவல்.

  • வெண்கலம் வென்ற அமன் ஷெராவத்துக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து. அமனின் சாதனையை ஒட்டுமொத்த தேசமும் கொண்டாடுவதாக புகழாரம் சூட்டி தங்களின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

  • வினேஷ் போகட் வழக்கில் இன்று தீர்ப்பளிக்கிறது சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம். எடை அதிகரிப்புக்கு அடுத்தடுத்த போட்டிகள் உள்ளிட்டவை முக்கிய காரணம் என வாதம் முன்வைப்பு.

  • நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டுக்கு இன்று செல்கிறார் பிரதமர் மோடி. வான்வழியாக பார்வையிட்டு ஆய்வு செய்வதுடன் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • வயநாடு செல்லும் பிரதமர் மோடியின் முடிவு வரவேற்கத்தக்கது எனவும், தேசிய பேரிடராக அறிவிப்பார் என்றும் நம்புவதாக ராகுல்காந்தி எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

  • செங்கல்பட்டு, திருவண்ணாமலை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்றும் கனமழை பெய்தது. வேலூர், சேலத்தில் கனமழையால் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.

  • புதுச்சேரியில் 4 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் சாலைகளில் பெருக்கெடுத்த தண்ணீர். இந்நிலையில், பள்ளிளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  • ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கேட்டு சென்னை வள்ளுவர்கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், உண்மையான குற்றவாளிகளை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என இயக்குநர் பா.ரஞ்சித் பேச்சு.

  • ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ரவுடி நாகேந்திரனை கைது செய்தது சென்னை காவல்துறை.

  • 17 மாதங்களுக்கு பிறகு திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார் மணிஷ் சிசோடியா. அவருக்கு, குடும்பத்தினர், ஆம் ஆத்மி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com