தலைப்புச் செய்திகள் | அதிபர் வேட்பாளரான கமலா ஹாரிஸ் முதல் ஒலிம்பிக் வெல்லப்போகும் வினேஷ் போகத் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்திகளானது ஷேக் ஹசீனாவுக்கு அடைக்கலம் தர இங்கிலாந்து மறுப்பு, ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய வினேஷ் போகத், ஜனநாயகக்கட்சி அதிபர் வேட்பாளரான கமலா ஹாரிஸ் உட்பட பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது
கமலா ஹாரிஸ் - வினேஷ் போகத்
கமலா ஹாரிஸ் - வினேஷ் போகத்புதிய தலைமுறை
Published on
  • ஒலிம்பிக் மல்யுத்தத்தில் பதக்கத்தை உறுதி செய்தார் இந்தியாவின் வினேஷ் போகத். இதன்மூலம், ஒலிம்பிக் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய பெண் என்ற சாதனையை படைத்தார்.

கமலா ஹாரிஸ் - வினேஷ் போகத்
இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம்.. இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் வினேஷ் போகத்
  • ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா இறுதிச் சுற்றுக்கு முன்னேறி அசத்தல். முதல் முயற்சியிலேயே 89 புள்ளி 34 மீட்டர் தூரம் வீசி முத்திரையை பதித்தார்

கமலா ஹாரிஸ் - வினேஷ் போகத்
களத்தில் சீறிப்பாய்ந்த ஈட்டி.. முதல் சுற்றிலேயே நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நீரஜ் சோப்ரா!
  • ஒலிம்பிக் ஹாக்கி அரையிறுதிப் போட்டியில் இந்தியா ஜெர்மனியிடம் 2-3 என்ற கோல் கணக்கில் போராடித் தோல்வியடைந்தது.

நீரஜ் சோப்ரா - வினேஷ் போகத்
நீரஜ் சோப்ரா - வினேஷ் போகத்
  • இலங்கை கடற்படை கப்பல் மோதி மாயமான மீனவரின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு.

  • வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ் அறிவிக்கப்பட்டார். மேலும், நாடாளுமன்றத்தையும் கலைத்தார் அதிபர் முகமது சகாபுதீன்.

கமலா ஹாரிஸ் - வினேஷ் போகத்
வங்கதேச நாடாளுமன்றம் கலைப்பு... புதிய தேர்தலுக்கு தயாராகிறதா வங்கதேசம்?
  • வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அடைக்கலம் அளிக்க இங்கிலாந்து மறுப்பு தெரிவித்துள்ளதை அடுத்து, மேலும் சில நாட்கள் இந்தியாவில் இருப்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

  • வங்கதேசத்தில் அடுத்தடுத்து முன்னாள் அமைச்சர்களை கைது செய்துவருகிறது அந்நாட்டு ராணுவம். இந்தவகையில், ஹஸன் முகமது, ஜுனைத் அகமது என பட்டியல் நீண்டுக்கொண்டே செல்கிறது.

  • வங்கதேசத்தில் சிறுபான்மையினர் குறிவைத்து தாக்கப்படுவதால் அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், ஜனநாயக நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளது.

  • வங்கதேசத்தில் சிறுபான்மையினரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலளித்துள்ளார்.

  • மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம். இந்நிலையில், நிலச்சரிவில் உயிரிழந்தோரை அவமதிப்பதாகவும் ஆதங்கம்.

  • அமெரிக்காவில் ஜனநாயகக்கட்சி அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு. மின்னசோட்டா ஆளுநர் Tim Walz ஐ துணை அதிபர் வேட்பாளராக தேர்வு செய்தார் கமலா.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com