தலைப்புச் செய்திகள் | ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் மேலும் சிலர் கைது முதல் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று வரை

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் மேலும் சிலர் கைதானது முதல் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று உறுதியானது வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்புதிய தலைமுறை
Published on
  • காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்வதன் எதிரொலி காரணமாக, தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

  • நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குடியிருப்புகள், சாலைகளை சூழ்ந்த தண்ணீரில் தவித்த குடும்பங்கள் மீட்கப்பட்டனர்.

  • கனமழை காரணமாக வால்பாறையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு. நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

  • நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

Neet
Neet
  • சந்தைகளில் தக்காளி விலை ஏற்றம் எதிரொலி காரணமாக, பண்ணை பசுமை கடைகளில் 61 ரூபாயிற்கு விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

  • கர்நாடகாவில் தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீட்டை கட்டாயமாக்கும் மசோதா நிறுத்தி வைக்கப்பட்டது. இம்மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

  • ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பெண் வழக்கறிஞர் உட்பட மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கொலை தொடர்பாக வழக்கறிஞர் மலர்க்கொடிக்கு பல லட்சம் ரூபாய் கை மாறியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
ஆம்ஸ்ட்ராங் படுகொலை எதிரொலி|உத்தரவு போட்ட காவல் ஆணையர்! 77 பேர் அதிரடி கைது.. மரண பீதியில் ரவுடிகள்!
  • அதிமுக ஆட்சியில் உதய் மின்திட்டத்தில் இணைந்ததால் தமிழகத்தின் உரிமை இழக்கப்பட்டுள்ளதாக செல்வப்பெருந்தகை விமர்சனம் செய்துள்ளார். மேலும், மத்திய அரசு கூறும் விலையையே தமிழக அரசு அறிவிப்பதாக, மின்கட்டண உயர்வு குறித்து பேசியுள்ளார்.

  • மின் கட்டண உயர்வை கண்டித்து வரும் 25ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சிபிஎம் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

கே.பாலகிருஷ்ணன்
கே.பாலகிருஷ்ணன் File Image
  • தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் சென்னையில் வரும் 23ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 14ஆம் தேதி வரை, 55 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

  • அமெரிக்க அதிபர் பைடனுக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டதற்கான லேசான அறிகுறி இருப்பதால் அவர் தனிமைப்படுத்திக் கொண்டதாக வெள்ளை மாளிகை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com