தமிழகத்தில் மின்சார கட்டணங்களை உயர்த்தியது மின்சார ஒழுங்குமுறை ஆணையம். இந்நிலையில், வீடுகளுக்கான மின் கட்டணம் யூனிட்டிற்கு 20 காசு முதல் 55 காசு வரை உயர்த்தப்பட்டுள்ளது.
வீடுகளுக்கான 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும் என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு. மேலும், ஒரு கோடி நுகர்வோர்களுக்கு மின் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் விளக்கம்.
வணிக பயன்பாட்டுக்கான மின் கட்டணம் கிலோவாட்டுக்கு 40 காசு அதிகரித்ததால், தொழில் மேலும் நலிவடையும் என சிறு, குறு நிறுவனங்கள் சங்கத் தலைவர் ரகுநாதன் வேதனை தெரிவித்துள்ளார்.
அதிகரிக்கும் நிதி இழப்பை ஈடுகட்டவே மின்கட்டண உயர்வு என்றும், மத்திய அரசின் நிதியை பெறுவதற்கு, ஆண்டுதோறும் மின் கட்டணம் திருத்தம் செய்வது முன் நிபந்தனை எனவும் தமிழக அரசு விளக்கம்.
காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக அரசுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம். அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் தலைமையில் இன்று சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
கர்நாடகாவில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளின் நீர்மட்டம் உயர்ந்தது, இதனால், காவிரியில் நீர்வரத்து 25,500 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
சட்டவிரோத பணிப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் ஜாபர் சாதிக்கிற்கு வரும் 29ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விசாரணையின் போது அமலாக்கத்துறை துன்புறுத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடலூரில் மாடு முட்டி கிழே விழுந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பேருந்தில் சிக்கி உயிரிழப்பு. சாலைகளில் கட்டுப்பாடின்றி திரியும் கால்நடைகளால் மேலும் ஒரு உயிர் பறிபோன் பரிதாபம்.
அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்ப் அதிகாரப்பூர்வ அறிவிப்பு. துணை அதிபர் பதவிக்கு ஜே.டி. வாப்ஸ் போட்டியிடுகிறார்.