அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. குண்டு பட்டதில் காது பகுதியில் காயமடைந்த டிரம்ப் தற்போது நலமுடன் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில், சூப்பாக்கிச்சூடு நடத்திய நபரை சுட்டுக்கொன்றது சிறப்பு பாதுகாப்புப் படை.
பராமரிப்புப் பணி காரணமாக சென்னை கடற்கரைக்கு பதில் எழும்பூரில் இருந்து இன்று புறநகர் ரயில்கள் இயக்கப்படும். பயணிகளின் நலன் கருதி கட் சர்வீஸ் பேருந்துகளை ஏற்பாடு செய்தது மாநகர போக்குவரத்துக் கழகம்.
பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் பாலையும் சேர்த்து வாங்க தயார் என ஆவின் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தகவலளித்துள்ளார்.
ரவுடி துரை என்கவுன்டர் செய்யப்பட்ட வழக்கில் விசாரணை அதிகாரியாக புதுக்கோட்டை கோட்டாட்சியரை நியமித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சிவகங்கை அருகே எருது கட்டு விழாவின்போது இரு கிராம மக்கள் இடையே மோதல் ஏற்பட்டதால்,லேசான தடியடி நடத்தி காவல்துறையினர் கூட்டதைக் கலைத்தனர்.
மும்பையில் இரவு முழுவதும் கொட்டிய கனமழை காரணமாக, சாலைகள், சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி..
உக்ரைன் மீது குண்டுகளை வீசி ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தியதில், காவல்துறை அதிகாரி உட்பட 2 பேர் உயிரிழப்பு, 22 பேர் காயம் என தகவல்.
முன்னாள் வீரர்களுக்கான உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் கோப்பையை வென்றது இந்திய அணி. இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அசத்தல்.
யூரோ கோப்பையை முதல்முறையாக கைப்பற்றுமா இங்கிலாந்து அணி?.இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணியுடன் இன்று பலப்பரீட்சை.
ஆனந்த் அம்பானி திருமணத்திற்குப் பிந்தைய கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைப்பெற்றது. இதில், அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர், விளையாட்டு வீரர்கள் என ஒரே இடத்தில் குவிந்த பிரபலங்களால் கலைக்கட்டியது திருமண விழா.