இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்முகநூல்

தலைப்புச் செய்திகள் | விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தொடக்கம் முதல் பிரதமர் பெற்ற உயரிய விருது வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்திகளானது இன்று காலை 7 மணி அளவில் தொடங்கிய விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முதல் இன்று பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட உயரிய விருது வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.
  • விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு சற்று முன்பு தொடங்கியது. காலை 7 மணி அளவில் தேர்தல் தொடங்கியது.

  • பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் உயரிய குடிமகன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. “இவ்விருது பல நூற்றாண்டுகளாக தொடரும் ஆழமான நட்புக்கு கிடைத்த விருது” என மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

  • அரசுமுறை பயணமாக ஆஸ்திரியா சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பிரதமர் விருந்து வழங்கினார். மேலும் இருநாட்டு தலைவர்கள் இன்று அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர்.

ஆஸ்திரியா அதிபருடன் பிரதமர் மோடி
ஆஸ்திரியா அதிபருடன் பிரதமர் மோடி
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
IND W V SA W| 3வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி.. சாதனை பட்டியலில் இணைந்த ஸ்மிருதி மந்தனா!
  • துப்பாக்கிகள், குண்டுகள் மத்தியில் போர்களங்களில் அமைதிக்கான தீர்வுகள் கிடைக்காது எனவும், அமைதியை நிலைநாட்ட இந்தியா தயாராக இருப்பதாகவும் ரஷ்ய அதிபருடனான பேச்சுவார்த்தையில் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

  • தாம்பரம், திருப்பூர், சேலம் மாநகர காவல் ஆணையர்களை உட்பட தமிழ்நாட்டில் 18 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்ய உத்தரவு.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
மக்களை பிரித்து சமூகத்தை தனித் தனியாக வைக்கிறது ஜாதி - பிரின்ஸ் கஜேந்திர பாபு
  • படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து முதலமைச்சர் ஆறுதல். மேலும், குற்றவாளிகளை தண்டிப்பதில் அரசு உறுதியாக இருப்பதாக தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்
படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்
  • ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.

  • அன்புமணி ராமதாஸ், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

  • காங்கிரஸின் செல்வப்பெருந்தகை மற்றும் பாஜகவின் அண்ணாமலை இடையே வார்த்தை மோதல் தொடரும் நிலையில், தன்மீதான வழக்கை நீதிமன்றமே ரத்து செய்ததாக செல்வப்பெருந்தகை வீடியோ வெளியிட்டு விளக்கம்.

  • காஞ்சிபுரம் மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் வரும் 29ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிப்பு.

  • காசா மீது இஸ்ரேல் மீண்டும் வான்வழி தாக்குதல் நடத்தியதில், பொதுமக்கள் தஞ்சமடைந்திருந்த பள்ளியில் 25 பேருக்கு மேல் உயிரிழப்பு

  • யூரோ கோப்பை கால்பந்து தொடரின இறுதிப் போட்டியில் நுழைந்தது ஸ்பெயின். பிரான்ஸ் அணியை இரண்டுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com