சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக, சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
கோவை, நெல்லையைச் சேர்ந்த திமுக மேயர்கள் அடுத்தடுத்து பதவி விலகியுள்ளனர். இந்நிலையில், முதலமைச்சரின் அறிவுறுத்தல்படி ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மீண்டும் சர்ச்சையாகும் அக்னிவீர்திட்டத்தில், ராகுல்காந்தி குற்றச்சாட்டுக்கு இந்திய ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது.
நீட் விலக்கு ஒன்றே தீர்வு என கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் விஜய் பேச்சு. மேலும், கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரவும் வலியுறுத்தல்.
சேலத்தில் அதிமுக பிரமுகரை வெட்டிக் கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி உறவினர்கள் போராட்டத்தை மேற்கொண்டனர்.
121 உயிர்களை பறித்த ஹாத்ராஸ் கூட்ட நெரிசல் சம்பவம், சமூக விரோதிகளின் சதி என ஆன்மீக சொற்பொழிவாளர் போலே பாபா குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.
பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளனர்.
உலகக்கோப்பையுடன் இன்று தாயகம் திரும்பியுள்ளனர் இந்திய வீரர்கள். மும்பையில் நடைபெறும் பிரம்மாண்ட பேரணியில் பங்கேற்க ரசிகர்களுக்கு கேப்டன் ரோஹித் சர்மா அழைப்பு விடுத்துள்ளார். காலை 11 மணியளவில் பிரதமரை சந்திக்கும் வீரர்கள், மாலையில் பேரணி செல்கின்றனர்.
பிரிட்டனில் இன்று நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதில், கன்சர்வேட்டிவ் - தொழிலாளர் கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி நிகழுகிறது.
பிரிட்டன் தேர்தலில் வேட்பாளர்களாக களமிறங்கியிருக்கும் தமிழர்கள்....! கடந்த முறையை விட இந்தமுறை அதிக இந்திய வம்சாவளியினர் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.