20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்திய அணி. அரையிறுதியில் இங்கிலாந்தை 68 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து அசத்தல் வெற்றி பெற்றது இந்திய அனி.
20 ஓவர் உலகக்கோப்பையை கைப்பற்றப் போவது யார்?... இறுதிப்போட்டியில்தென்னாப்ரிக்காவுடன் நாளை மோதுகிறது இந்தியா..
நாடாளுமன்றத்தில் இன்று குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெறவுள்ளது. இதில், நீட் முறைகேடு, அக்னிவீர் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம் தீட்டியுள்ளனர்.
ஓசூரில் 2 ஆயிரம் ஏக்கரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பினை வெளியிட்டார்.
விஷ சாராய மரணத்திற்கு சிபிஐ விசாரணைக் கோரி சென்னையில் அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இதில், கள்ளக்குறிச்சியே கண்ணீரில் மிதப்பதாக எடப்பாடி பழனிசாமி வேதனை தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மரணத்திற்கு சிபிஐ விசாரணை கோராமல் ஒருநபர் ஆணையம் அமைத்தது ஏன்? என எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் கே. என்.நேரு கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவானது சென்னை திருவான்மியூரில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவில் தீவிரமெடுக்கும் தென்மேற்கு பருவமழை காரணமாக, அதிரப்பள்ளி அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால், சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
செல்போன் கட்டணத்தை இரண்டு ரூபாய் முதல் 600 ரூபாய் வரை உயர்த்தியது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம். இது ஜூலை 3ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிப்பு.
அமெரிக்க அதிபர் தேர்தல் வலுக்கும் போட்டி. ஜோ பைடன், டொனால்ட் டிரம்ப் இடையே சற்று நேரத்தில் நேரடி விவாதம் நடைபெறவுள்ளது.