தலைப்புச் செய்திகள் | சாதிவாரி கணக்கெடுப்பு தனித்தீர்மானம் முதல் நிரம்பி வழியும் பில்லூர் அணை வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது சாதிவாரி கணக்கெடுப்பு தீர்மானம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது முதல் நிரம்பி வழியும் பில்லூர் அணை வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்முகநூல்
Published on
  • சாதிவாரி கணக்கெடுப்புடன் பத்தாண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை ஒருங்கிணைத்து மேற்கொள்ள வேண்டும் என சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
சாதிவாரி கணக்கெடுப்பு - தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றம்!
  • சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசுதான் நடத்த முடியும் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறுவதை ஏற்க முடியாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம்.

  • தேர்தல் நேரங்களில் மட்டும் 10.5% இடஒதுக்கீடு பற்றி பேசி மக்களை ஏமாற்றி வருகிறது பாமக என அன்புமணி ராமதாசின் குற்றச்சாட்டுக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதிலடி.

ராமதாஸ், அன்புமணி, ரகுபதி
ராமதாஸ், அன்புமணி, ரகுபதிpt web
  • சட்டப்பேரவை கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அரசை கண்டித்து அதிமுகவினர் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படுகிறது.

  • நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் இன்று உரையாற்றுகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. இதில், மத்திய அரசின் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • 2 ஆவது முறையாக மக்களவையின் சபாநாயகரானார் ஓம் பிர்லா. இவருக்கு, பிரதமர் நரேந்திரமோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
மீண்டும் சபாநாயகராக ஓம் பிர்லா.. 2வது இன்னிங்ஸில் இருக்கும் சவால்கள்.. கடந்த கால செயல்பாடுகள் என்ன?
  • மாஞ்சோலை தேயிலை தோட்டங்களை கையகப்படுத்தி நடத்த அதிகாரமில்லை என தமிழ்நாடு தேயிலை தோட்ட கழக இயக்குநர் பதிலளித்துள்ளார்.

  • மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடரும் கனமழையால் பில்லூர் அணை நிரம்பியது வழிகிறது. உபரி நீர் வெளியேற்றப்படுவதால் பவானி ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • கன்னியாகுமரி மலையோரப்பகுதிகளில் பெய்யும் கனமழையால் கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில், மோதிரமலை - குற்றியார் இடையே தரைப்பாலத்தை மூழ்கடித்தப்படி தண்ணீர் செல்வதால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

  • டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறப் போவது யார்? என அரையிறுதியில் இங்கிலாந்துடன் இன்று மோதுகிறது இந்தியா.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com