தலைப்புச் செய்திகள் | மக்களவை சபாநாயகரை தேர்ந்தெடுக்க போட்டி முதல் இந்தியன் - 2 ட்ரைலர் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, மக்களவை சபாநாயகரை தேர்ந்தெடுக்க போட்டி முதல் இந்தியன் - 2 டிரைலர் வெளியானது வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்முகநூல்
Published on
  • வரலாற்றில் முதல்முறையாக மக்களவை சபாநாயகரை தேர்ந்தெடுக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஓம் பிர்லா, I.N.D.I.A. கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
ஓம் பிர்லா Vs கொடிக்குன்னில் சுரேஷ்: சபாநாயகர் பதவிக்கு போட்டியிடும் இருவரின் வியக்கவைக்கும் பின்னணி
  • மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தியை தேர்வு செய்ய I.N.D.I.A. கூட்டணி நாடாளுமன்ற குழு தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

  • தமிழகத்திற்கு ஜூலை மாதத்திற்கு தரவேண்டிய 31.24 டிஎம்சி தண்ணீரை திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது.

காவிரி விவகாரம்
காவிரி விவகாரம் முகநூல்
  • தமிழகத்தில் இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் 75 ஆயிரம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு.

  • விஷ சாராய மரண வழக்கில் சிபிஐ விசாரணை கோரி ஆளுநரிடம் மனு அளித்த அதிமுக மாநில காவல்துறையின் விசாரணை நேர்மையாக இருக்காது என எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டினை முன்வைத்தார்.

  • கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்களை சிபிஐக்கு மாற்றக்கோரும் வழக்கு இன்று மீண்டும் விசாரணை செய்யவுள்ள நிலையில், தமிழக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட வாய்ப்பு.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
கள்ளக்குறிச்சி | விஷ சாராய வழக்கில் மேலும் 6 பேர் கைது... இதுவரை கைதானவர்கள் எத்தனை பேர்?
  • தருமபுரியில் ஃபர்னிச்சர் கடையில் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தை அணைக்க தீயணைப்பு வீரர்கள் 5 மணி நேரத்திற்கு மேல் போராட்டம்.

  • ஆல் இந்தியா பர்மிட் கொண்ட வெளிமாநிலத்தில் பதிவு செய்த ஆம்னி பேருந்துகளுக்கு தடை விதிக்கக் கூடாது என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.

  • பாலாற்றில் புதிய தடுப்பணைகள் கட்டப்படும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உறுதியளித்துள்ளார். இந்தவகையில், அணை கட்டுவதை தடுக்க உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சருக்கு இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

  • இந்தியன் - 2 திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. தற்போதும் தொடரும் ஊழல்தான் இந்தியன் - 2 உருவாக காரணம் என நடிகர் கமல்ஹாசன் பேச்சு.

  • கென்யாவில் வரிகளை உயர்த்தும் அரசின் முடிவை கண்டித்து நாடாளுமன்றத்துக்கு தீ வைப்பு. இந்த போராட்டத்தில் 5 பேர் உயிரிழப்பு, 30- க்கும் மேற்பட்டோர் படுகாயம்.

  • யூரோ கால்பந்து தொடரில் இங்கிலாந்து, டென்மார்க் அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம். வெற்றி பெறாமல் புள்ளிகள் அடிப்படையில் தகுதி பெற்றதால் ரசிகர்கள் மகிழ்ச்சி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com