கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண வழக்கில் கள்ளச்சாராயம் தயாரிக்க மெத்தனால் விற்ற குற்றச்சாட்டில் மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். மேலும், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்
தமிழகத்திலிருந்து தேர்வான மக்களவை எம்.பிக்கள் இன்று பதவியேற்கவுள்ளனர். புதுச்சேரி எம்.பி. உள்ளிட்டோரும் பதவியேற்கவுள்ளனர்.
முதல் நாளிலேயே நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது நீட் எதிர்ப்பு குரல். இந்தவகையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியேற்றபோது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டனர்.
சென்னை மாநகராட்சி விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் தொடங்கப்படும் எனவும், ஆறு புதிய பூங்காக்கள் அமைக்கவும் மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வாக்காளருக்கு உரிமை உண்டு என கீதா ஜீவன் வழக்கு தொடர்பான ஆவணங்களை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பிணை வழக்கில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு. இந்தநிலையில், பிணை வழங்குவது குறித்து இன்று தீர்ப்பளிக்கிறது டெல்லி உயர்நீதிமன்றம்.
உத்தரப் பிரதேசத்தில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், அயோத்தி ராமர் கோயில் மேற்கூரையில் மழை நீர் தேங்குவதாகவும், வெளியேறுவதற்கு முறையான அமைப்பு இல்லை எனவும் அர்ச்சகர் பேட்டி அளித்திருக்கிறார். குறிப்பாக மேற்கூரை ஒழுகுவதாக தலைமை அர்ச்சகர் பேட்டியளித்துள்ளார். இந்நிலையில், கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடையும் போது கசிவுகள் இருக்காது என கோயில் கட்டுமான கமிட்டி விளக்கம்.
ரஷ்யாவில் மதவழிபாட்டுத் தலங்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், போதகர், காவல்துறை அதிகாரிகள் உள்பட 20 பேர் உயிரிழப்பு.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் நுழைந்தது இந்தியா. சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியாவை 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.