தலைப்புச் செய்திகள் | இன்று தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் முதல் வெடித்து சிதறிய ராக்கெட் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்திகளானது, இன்று தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் முதல் வெடித்து சிதறிய விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட் வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்முகநூல்
Published on
  • நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிற சூழலில், நீட் முறைகேடு உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர்.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
நாளை கூடுகிறது நாடாளுமன்ற கூட்டத்தொடர்: எதிர்க்கட்சிகள் எழுப்ப இருக்கும் முக்கிய பிரச்னைகள் இவைதான்!
  • கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57ஆக அதிகரித்தநிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  • நாட்டையே உலுக்கிய கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண வழக்கில், முக்கிய குற்றவாளிகளான மாதேஷ், சின்னதுரையை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி முடிவு செய்துள்ளது.

கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்கள்
கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்கள்ட்விட்டர்
  • கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் ஆறுதல் கூறினார். மேலும் அரசு வழிகாட்டுதலுடன் வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

  • விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் கொடுத்தது தீய முன் உதாரணம் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பேச்சு.

  • திருச்சியில் கஞ்சா புகைத்தவர்கள் மற்றும் சப்ளை செய்த வியாபாரியை சிறைப்பிடித்த இளைஞர்களின் மீது, நடவடிக்கை எடுக்க, போலீசார் தயங்கியதாக பொதுமக்கள் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர்.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
"ஹர்திக் பாண்டியா முன்னாள் பாகிஸ்தான் வீரரை போல விளையாடுகிறார்" -சர்ப்ரைஸாக ஒப்பிட்ட முன்.IND வீரர்!
  • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ததால், வெப்பம் தணிந்து குளுமையான சூழல் நிலவியதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

  • நீட் தேர்வில் முறைகேடு செய்த 63 மாணவர்கள் தகுதி நீக்கம் செய்து, தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டுள்ளது.

  • சீனாவில் விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட், குடியிருப்பில் விழுந்து வெடித்துச் சிதறியதில் பதறியடித்து ஓடிய மக்கள்.

  • டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் சூப்பர் 8 சுற்று... அமெரிக்காவை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு சென்றது இங்கிலாந்து.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com