தலைப்புச் செய்திகள் | AI பற்றி ஜி7 மாநாட்டில் பிரதமர் பேச்சு To அருந்ததி ராய் மீது பாய்கிறது உபா!

இன்றைய காலை தலைப்புச் செய்திகளானது, குவைத் தமிழர்களின் இறந்த உடல்கள் தமிழகம் வருகை முதல் எழுத்தாளர் அருந்ததி ராய் மீது உபா சட்டம் பாய்ந்தது வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்முகநூல்
Published on
  • திருப்பத்தூரில் கார் பார்க்கிங்கில் பதுங்கிய சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி மீட்கப்பட்டது. மேலும், 6 மணி நேரமாக 2 கார்களுக்குள் தவித்த 5 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

  • குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு. இந்நிலையில், வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று பூத உடலாய் திரும்பி வந்தவர்களை பார்த்து கதறி அழுத குடும்பத்தினர்.

  • AI தொழில்நுட்பம் வெளிப்படைத்தன்மையுடனும், பாதுகாப்புடனும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என ஜி7 மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்.

  • ஜி7 மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கனடா பிரதமர் ட்ரூடோ, போப் பிரான்சிஸ் உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி சந்திப்பு.இந்தவகையில், அனைத்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளையும் நிறைவுசெய்துவிட்டு இந்தியா புறப்பட்டார் நரேந்திர மோடி.

  • காஷ்மீர் பிரிவினை பற்றி கருத்து தெரிவித்ததாக கூறி எழுத்தாளர் அருந்ததி ராய் உள்ளிட்டோர் மீது உபா சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க டெல்லி துணைநிலை ஆளுநர் அனுமதி அளித்துள்ளார்.

  • கோவையில் இன்று நடைபெறுகிறது முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கும் திமுக முப்பெரும் விழா.இது குறித்த விமர்சித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இது தற்காலிக கொண்டாட்டம்தான் என்று பதிவு.

  • புதுச்சேரியில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த பகுதியில் துணைநிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆய்வு. இந்நிலையில், தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி.

  • விருதுநகர் அருகே லேப்டாப் வயரில் மின்சாரம் பாய்ந்ததில் இளம்பெண் உயிரிழப்பு. சார்ஜ் போட்டபடி லேப்டாப் பயன்படுத்தியதால் நேர்ந்த சோகம்.

  • டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி அமெரிக்கா அசத்தல். மழையால் போட்டி ரத்தானதால் லீக் சுற்றிலேயே வெளியேறியது பாகிஸ்தான் அணி.

  • படைப்பாளர்களுக்கு திரையரங்குகளில் உள்ள படைப்பு சுதந்திரம், ஓ.டி.டி.யில் இல்லை என கருடன் பட நிகழ்ச்சியில் இயக்குநர் வெற்றிமாறன் பேச்சு.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com