தலைப்புச் செய்திகள் | ‘நீங்கள் நலமா?’ திட்டம் முதல் நடிகை நிவேதா பெத்துராஜ் வேதனைப்பதிவு வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது முதல்வரின் நீங்கள் நலமா திட்டம் முதல் தன்னை பற்றிய அவதூறு குறித்து வேதனை தெரிவித்த நடிகை நிவேதா பெத்துராஜ் வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்முகநூல்
Published on

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்

  • மக்களை தேடிச் சென்று நலம் விசாரிக்கும் நீங்கள் நலமா? திட்டத்தினை இன்று தொடங்கிவைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

  • டிசம்பர் மாதம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நிவாரணம் அளிக்க வீடுகள் பழுது நீக்கம் மற்றும் கட்டுமான பணிகளுக்கு சுமார் 46 கோடி ரூபாய் ஒதுக்கியது தமிழக அரசு.

  • ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு 5 சாக்குகளில் கடத்த முயன்ற 108 கோடி ரூபாய் மதிப்பிலான ஹாஷிஷ் என்ற போதைப்பொருளை வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

  • போதைப்பொருள் தயாரிப்பு மையமாகவே தமிழ்நாடு மாறிவிட்டதோ என சந்தேகம் எழுவதாக இபிஎஸ்-ம், முதமைச்சர் இன்னும் எத்தனை காலம் அமைதியாக இருக்கப்போகிறார் என அண்ணாமலையும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

  • இந்தியா முழுவதும் போதைப்பொருள் புழக்கம் உள்ள நிலையில் தமிழகம் மீது மட்டும் பழி போடுவது ஏன்? என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

  • சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி பேசியதை எதிர்த்து தொடரப்பட்ட கோ -வாரண்டோ வழக்குகள் மீது இன்று தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம்.

  • நாடாளுமன்றத் தேர்தலையொட்டி விருப்ப மனு பெற்றார் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி. ஆகவே, தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிட முடிவு செய்துள்ளார்.

எம்.பி. கனிமொழி
எம்.பி. கனிமொழிTwitter
  • தொகுதிப்பங்கீடு தொடர்பாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியுடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு நடைப்பெற்றது. மேலும், தேமுதிகவுடன் 2ஆம் கட்டமாக இன்று பேச்சுவார்த்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

  • அதிமுகவுடன் இந்த முறை கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை, திமுகவுடனே கூட்டணித் தொடரும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.

  • சென்னையில் காலை 7.30 மணிக்கு தொடங்குகிறது பாஜக மாநில தேர்தல்குழு கூட்டம். மேலும், உத்தேச வேட்பாளர்கள் பட்டியல் தயாரிப்பு தொடர்பாக காலை 11 மணிக்கு மேல் டெல்லி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • விளவங்கோட்டை தொடர்ந்து திருக்கோவிலூர் சட்டப்பேரவை தொகுதியும் காலியானதை தொடர்ந்து தேர்தல் ஆணையத்திற்கு சட்டப்பேரவை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்

  • அடிக்கல் நாட்டிய 5 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளது. தேர்தலுக்காக பணிகளை தொடங்கி இருப்பதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் விமர்சனம் செய்துள்ளார்.

  • புதுச்சேரியில் காணாமல்போன 9 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டதால் கொந்தளித்த மக்கள். கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.

  • தமிழகம், கேரளா உள்ளிட்ட 6 மாநிலங்களில் 17 இடங்களில் சோதனை நடத்திய என்ஐஏ சோதனையில் 25 செல்போன்கள், 6 மடிக்கணினிகள், முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர்.

  • செங்கல்பட்டு அரசு நர்சிங் கல்லூரியில் மாணவர்கள் தாடி வைத்துக்கொள்ள தடை விதித்துள்ளனர். இதனால், கல்லூரி நிர்வாகத்தை எதிர்த்து முதலமைச்சருக்கு மாணவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

  • டாடி ஆறுமுகத்தின் வில்லேஜ் ஃபுட் ஃபேக்டரி முகநூல் கணக்கு முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த கணக்கில், ஹேக்கர்கள் ஆபாச படங்களை பதிவிடுவதால் பாலோவர்ஸ் அதிர்ச்சி அடைந்ததால் இந்த நடவடிக்கை.

  • இந்தியாவின் முதல் நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவையை கொல்கத்தாவில் இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.

  • மத்திய பிரதேசத்தில் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையில் ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிடப்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, வாகனத்தில் இருந்து இறங்கி எதிர்ப்பாளர்களிடம் அன்பை வெளிப்படுத்தினார் ராகுல் காந்தி.

  • வடக்குப்பகுதியில் நடைபெற்ற ஏவுகணைத் தாக்குதலில் கேரள இளைஞர் உயிரிழந்ததை அடுத்து இஸ்ரேலில் இருக்கும் இந்தியர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல இந்திய தூதரகம் அறிவுறுத்தி பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  • அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்பு போட்டியிட தடையில்லை என அமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

  • உலகம் முழுவதும் முடங்கிய முகநூல், இன்ஸ்டாகிராம் சமூக வலைதளங்கள். சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் செயல்பட தொடங்கியதால் பயனாளர்கள் நிம்மதி அடைந்தனர்.

  • ஐபிஎல் தொடங்கவுள்ள நிலையில் சென்னை வந்தார் தோனி . இதற்கிடையில், லியோ திரைப்பட காட்சியை மறுஉருவாக்கம் செய்து வெளியிட்ட சிஎஸ்கே நிர்வாகம்.

  • இங்கிலாந்து இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இந்நிலையில் தர்மசாலா மைதானத்தில் இந்திய வீரர்கள் பயிற்சியை தொடங்கியுள்ளனர்.

  • ராணுவத்துடன் இணைந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வீரர்களின் உடல் திறனை அதிகரிக்கும் வகையில் இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  • “சமூக வலைத்தளங்களில் என்னை பற்றி பரவும் அவதூறு தகவல்கள் உண்மையில்லை. இதனால், எங்கள் குடும்பமே மிக மனஉளைச்சலில் இருக்கிறது” என நடிகை நிவேதா பெத்துராஜ் வேதனை தெரிவித்துள்ளார்.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
50 கோடியில் வீடா? மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ளுங்கள்! பொய்செய்தி பற்றி நிவேதா பெத்துராஜ் ஆதங்கம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com