ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆட்சியமைக்க சம்பாய் சோரனுக்கு அழைப்பு விடுத்தார் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன். சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 10 நாள் அவகாசம்.
2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக்க இலக்கு. வருமான வரி உள்ளிட்ட வரி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை என இடைக்கால பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி வீடுகள் கட்டப்படும். வீடுகளில் சூரிய ஒளி மின்தகடுகள் அமைத்தால் 300 யூனிட் இலவச மின்சாரம் என்றும் இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்பு.
இடைக்கால பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்காக 6 ஆயிரத்து 331 கோடி ரூபாய் ஒதுக்கீடு. இடைக்கால பட்ஜெட் உத்வேகம் அளிக்கும் வகையில் இருப்பதாக பிரதமர் மோடி பெருமிதம்.
மக்களுக்கு ஏமாற்றத்தைத் தந்துள்ள மத்திய பட்ஜெட் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சனம்.
தென்னிந்தியாவுக்கு தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டால் தனி நாடு கோரிக்கைகள் எழும் என கர்நாடகா காங்கிரஸ் எம்,பி. பேசியதால் சர்ச்சை. நாட்டை பிளவுபடுத்த முயற்சிப்பதாக பாரதிய ஜனதா கட்சி விமர்சனம்.
வருகிற 12-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர். 19ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு.
கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சயானிடம் சிபிசிஐடி காவல்துறையினர் 8 மணி நேரம் விசாரணை. மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட வாய்ப்பு.
விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்குகிறது இந்தியா இங்கிலாந்து அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி.