தலைப்புச் செய்திகள் | மும்பையில் முன்னாள் அமைச்சர் சுட்டுக்கொலை To அதிரடி சதமடித்த சஞ்சு சாம்சன்!

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிகழ்வு முதல் 40 பந்துகளில் சதமடித்த சஞ்சுசாம்சனின் அதிரடி வரை பல முக்கிய செய்திகள்..
பாபா சித்திக், சஞ்சு சாம்சன்
பாபா சித்திக், சஞ்சு சாம்சன்pt web
Published on

உலக பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் மகிஷாசூரனை வதம் செய்த முத்தாரம்மன்...

திண்டுக்கல் பத்திரகாளியம்மன், கன்னியாகுமரி பகவதியம்மன் உள்ளிட்ட கோயில்களிலும் சூரசம்ஹாரம் விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

KulasaiDasara
KulasaiDasara

புதுக்கோட்டையில் கனமழையால் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. சாலையில் ஆறுபோல் பாய்ந்த தண்ணீரில் சிக்கிய ஆட்டோவில் இருந்து கைக்குழந்தை உள்ளிட்டோரை இளைஞர்கள் காப்பாற்றினர்.

மதுரையில் வெள்ளம்போல் பாய்ந்தோடிய மழைநீரில் ரயில்வே தரைப்பாலம் மூழ்கியது. காரில் சென்ற மூவர் நூலிழையில் உயிருடன் மீட்கப்பட்டனர்.

பாபா சித்திக், சஞ்சு சாம்சன்
தொடர்ந்து பறந்த 5 சிக்சர்கள்; முதல் டி20 சதமடித்த சஞ்சு சாம்சன்! 297 ரன்கள் குவித்து இந்தியா சாதனை!

சென்னையில் ஓடும் ரயிலில் விபரீத செயலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர், மின் கம்பத்தில் மோதியதில் படுகாயம் அடைந்தார்.

மும்பையில் தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கிச்சூடு நடத்தியதாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் தீவிரமாக தேடப்பட்டு வருகிறார்.

இஸ்ரேல் ராணுவத்தின் தொடர் தாக்குதல் எதிரொலியாக வடக்கு காசாவில் இருந்து கூட்டம் கூட்டமாக ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி வருகின்றனர்.

வங்கதேசத்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 133 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றி அபாரம்..

பாபா சித்திக், சஞ்சு சாம்சன்
’பையா நான் நடிச்சன்..’ டி20 உலகக்கோப்பையில் போலியான காயம்; உண்மையை உடைத்த ரிஷப் பண்ட்! நடந்தது என்ன?

வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் அடுத்தடுத்து 5 சிக்சர்களை அடித்து நொறுக்கினார் சஞ்சு சாம்சன். வெறும் 40 பந்துகளில் சதமடித்து சாதனை படைத்துள்ளார்.

கோட் திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடினார் நடிகர் விஜய். தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி உடன் கேக் வெட்டி மகிழும் வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.

பாபா சித்திக், சஞ்சு சாம்சன்
”இந்துக்கள் ஆபத்தில் இருக்கிறார்கள்; வங்கதேசத்தில் என்ன நடந்தது?” - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com