மதுரையில் ஜே.பி. நட்டா.. செவிலியர்கள் போராட்டம்.. இன்னும் சில முக்கியச் செய்திகள்
நாட்டின் வளர்ச்சி வரும் நிதியாண்டில் 11 சதவிகிதமாக உயரும் என பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல். பொருளென்னும் பொய்யா விளக்கம் எனும் திருக்குறளுடன் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கை.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநருடன் முதலமைச்சர் சந்திப்பு. உரிய நடவடிக்கை எடுக்க ஆளுநர் உறுதியளித்திருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.
ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை விலையை உயர்த்த பொருளாதார ஆய்வறிக்கையில் பரிந்துரை. உணவு மானிய செலவுகளை குறைக்க மத்திய அரசுக்கு யோசனை.
இஸ்ரேல் தூதரகம் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பால் டெல்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு. மும்பையிலும் முக்கிய இடங்களில் காவலர்கள் குவிக்கப்பட்டு உச்சகட்ட உஷார் நிலை.
விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால் போராட்டம் பரவும் என ராகுல் எச்சரிக்கை. வன்முறையை தூண்டிவிடுவது போல பேசுவதா என பாரதிய ஜனதா குற்றச்சாட்டு.
மதுரையில் இன்று தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா. மாநில நிர்வாகிகளுடன் தேர்தல் பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்துகிறார்.
52,257 கோடி ரூபாய் மதிப்பிலான 34 முதலீட்டு திட்டங்களுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல். சுமார் 94 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும் என அரசு தகவல்.
மக்கள் பிரச்னைகளை தீர்க்க தனி இலாகா. திருவண்ணாமலையில் பரப்புரை தொடங்கிய திமுக தலைவர் ஸ்டாலின் வாக்குறுதி.
பணிநிரந்தரம் செய்யக்கோரி சென்னையில் போராடிய செவிலியர்கள். முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி.
போக்சோ சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டிய தருணம் இதுவே என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து . காதல் உறவில் உள்ள பல பதின்பருவ இளைஞர்கள் போக்சோ சட்டத்தால் தங்கள் வாழ்க்கையை இழப்பதாகவும் நீதிபதி கவலை.
கொரோனா தடுப்பு மருந்துகளை ஏற்றுமதி செய்ய கட்டுப்பாடு விதிக்கப் போவதாக அறிவிப்பு. ஐரோப்பிய யூனியன் முடிவுக்கு உலக சுகாதார அமைப்பு எதிர்ப்பு.
முஷ்டாக் அலி கோப்பை தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது தமிழக அணி. சாம்பியன் பட்டத்திற்கான ஆட்டத்தில் பரோடா அணியுடன் நாளை பலப்பரீட்சை.