அயோத்தியில் ராமர் கோயிலுக்கான பூமி பூஜை இன்று நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு கோயிலுக்கான அடிக்கல்லை நாட்டுகிறார்.
பிரதமர் மோடி இன்று இந்த விழாவில் கலந்துகொண்டு ராமர்கோயிலுக்கான அடிக்கல்லை நாட்டுகிறார். இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று காலை 9.35 மணியளவில் விமானப்படையின் சிறப்பு விமானம் மூலம் டெல்லியில் இருந்து லக்னோ கிளம்புகிறார். அங்கிருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் அயோத்தி கிளம்பும் அவர், 11.30 மணியளவில் அங்குள்ள சாகேத் கல்லூரி மைதானத்தில் இறங்குகிறார்.
பின்னர் நேராக அனுமன்ஹார்கி கோயிலுக்கு செல்லும் பிரதமர், அங்கிருந்து 12 மணியளவில் ராமஜென்மபூமிக்கு சென்று அங்கு ராம்லல்லா கோயிலில் வழிபாடு செய்கிறார். இதைத்தொடர்ந்து அவர் 12.30 மணியளவில் ராமர் கோயில் பூமி பூஜையில் கலந்து கொள்கிறார். அத்துடன் பிரமாண்ட ராமர் கோயிலுக்கான அடிக்கல்லையும் அவர் நாட்டுகிறார்.