6,244 பணியிடங்கள்.. 20 லட்சம் பேர் விண்ணப்பம்; இன்று நடைபெறகிறது டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!

இளைஞர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு இன்று நடைபெறுகிறது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முகநூல்
Published on

இளைஞர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு இன்று நடைபெறுகிறது.

கிராம நிர்வாக அலுவலர், வனக்காவலர், கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் என பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 6 ஆயிரத்து 244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு அறிவிப்பை, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் தேதி வெளியிட்டது.

இதற்கான அடிப்படை கல்வித் தகுதி, 10ஆம் வகுப்பு தேர்ச்சி என்றபோதிலும், முதுநிலை பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள் உள்பட 20 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இதில், தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ஆன்லைனில் ஹால்டிக்கெட் வழங்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு மையங்களிலும் குரூப்-4 எழுத்துத் தேர்வு இன்று நடைபெறுகிறது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4
இபிஎஸ் சொல்வதுபோல் வாக்குசதவீதம் அதிமுகவிற்கு அதிகரித்துள்ளதா? தராசு ஷ்யாம் சொல்வதென்ன?

காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும் என்றும், ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே தேர்வு மையத்திற்குள் தேர்வர்கள் சென்று விட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், குரூப்-4 தேர்வு முடிவுகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி ஏற்கெனவே தெரிவித்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com