திருப்பதி|மலக்குடலில் டாலர்கள்.. வெளிநாட்டு பக்தர்களின் ரூ100 கோடி காணிக்கை திருட்டு-வெளிவந்த மோசடி

திருப்பதி ஏழுமலையானுக்கு வெளிநாட்டு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய சுமார் 100 கோடி ரூபாய்க்கும் மேல் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் திருடுபோய் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து விரிவாக பார்க்கலாம்...
வெளிநாட்டு பணம் திருட்டு
வெளிநாட்டு பணம் திருட்டுpt desk
Published on

திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் தினமும் சுமார் 4 கோடி ரூபாயை கோயிலில் உள்ள உண்டியலில் காணிக்கையாக செலுத்தி செல்கின்றனர். அந்த தொகையில் வெளிநாட்டு பக்தர்கள் செலுத்திய பல்வேறு நாடுகளின் கரன்சிகளும் இருக்கும். இந்த நிலையில், திருமலை பெரிய ஜீயர் மடத்தில் வேலை செய்து வந்த தமிழ்நாட்டை சேர்ந்த ரவிக்குமார், அடிக்கடி கோயிலுக்குள் சென்று வந்து கொண்டு இருந்தார்.

Money counting
Money countingpt desk

இதனால் ஏற்பட்ட பழக்கத்தின் தொடர்ச்சியாக அவரை, சுமார் 20 ஆண்டுகளாக காணிக்கை பணம் கணக்கிடும் ஊழியர்களில் ஒருவராக தேவஸ்தான நிர்வாகம் நியமித்தது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் காணிக்கை பணம் கணக்கிடும் பகுதியில் இருந்து வெளியே வந்த அவரை பிடித்து தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது அவர் தன்னுடைய மலக்குடலில் அமெரிக்க டாலர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகளை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

வெளிநாட்டு பணம் திருட்டு
கதிகலங்கி நிற்கும் கடவுளின் தேசம்... பேரிடர்களின் பூமியான கேரளா.. இதுவரை நடந்த துயரங்கள்!

இதையடுத்து தேவஸ்தானம் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து, ரவிக்குமாரை காவல்துறை கைது செய்தது. விசாரணையில், அவர் பல ஆண்டுகளாக தினமும் ஏழுமலையானுக்கு காணிக்கையாக கிடைக்கும் வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளை திருடியதும், அந்த பணத்தை பயன்படுத்தி சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பில் அடுக்குமாடி குடியிருப்புகள், மாந்தோப்பு, தென்னந்தோப்பு, தங்க ஆபரணங்கள் என பல்வேறு சொத்துகளை வாங்கி இருப்பதும் தெரியவந்தது.

pt desk

இதையடுத்து பக்தர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை பாழாகிவிடும் என்று கருதி இந்த விவகாரத்தை தேவஸ்தானம், லோக் அதாலத்திற்கு கொண்டு சென்றது. அப்போது ஒரு உடன்படிக்கையை மேற்கொண்டு ரவிக்குமார் திருடிய காணிக்கை பணத்தை கொண்டு வாங்கிய சொத்துகளின் ஒரு பகுதியை தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக கொடுப்பதுபோல் எழுதி வாங்கி கொண்டனர். அதிகாரிகளின் இந்த முடிவிற்கு தேவஸ்தான அறங்காவலர்குழுவும் ஒப்புதல் அளித்திருந்தது.

வெளிநாட்டு பணம் திருட்டு
ஆந்திரா | 'எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்' - கொந்தளித்த ஷர்மிளா... நடப்பது என்ன?

இது பற்றி ஆந்திர மேல் சபை உறுப்பினர் ஒருவர், மாநில அறநிலையத்துறை அமைச்சர் ஆனம் விவேகானந்த ரெட்டியிடம் சமீபத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து ஆந்திர சட்டமன்ற மேல்சபையில் அமைச்சர் இந்த முறைகேடு குறித்து பேசியதை தொடர்ந்து, இந்த விவகாரம் பேசுபொருளாகியுள்ளது. உண்டியல் காணிக்கை பணத்தை கணக்கிடுவதுபோல் நடித்து திருடிய வெளிநாட்டு கரன்சிகளை பதுக்கி எடுத்து வருவதற்காக, ரவிக்குமார் சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் தன்னுடைய மலக்குடலைபெரிதுபடுத்தி கொண்டார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. அவருக்கு இந்த ஆலோசனையை வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்துபவர்கள் வழங்கி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com