திருப்பதியில் இன்று தொடங்குகிறது வருடாந்திர பிரமோற்சவம். கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டும் ஏகாந்தமாக நடக்கிறது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலின் வருடாந்திர பிரமோற்சவம் இன்று தொடங்கிறது. இதனையொட்டி திருப்பதி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கண்கொள்ளா காட்சியளிக்கிறது. ஆண்டுதோறும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாதத்தில் பிரமோற்சவ விழா நடைபெறும். 4 மாட வீதிகளின் வழியாக மலையப்ப சாமி, ஸ்ரீதேவி பூதேவியுடன் நாள்தோறும் காலை, மாலை என பல்வேறு வாகனங்களில் பகதர்களுக்கு சேவை வழங்குவார்.
ஆனால், கொரோனா காரணமாக கடந்த ஆண்டு பிரமோற்சவ விழா, ஏகாந்தமாக கோயிலின் உள்ளேயே நடைபெற்றது. இந்த ஆண்டும் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு போலவே, பிரமோற்சவ விழா கோயிலின் உள்ளே ஏகாந்தமாக நடைபெறும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இன்று முதல் 15-ஆம் தேதி வரை தொடர்ந்து 10 நாடுகளுக்கு பிரமோற்சவம் நடைபெற உள்ளது. இன்று மாலை 5 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கும் பிரமோற்சவ விழா, கோயிலின் உள்ளே கல்யாண உற்சவ மண்டபத்தில் இரவு 7 மணியளவில் பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சாமி காட்சி தருகிறார்.
இதன் தொடர்ச்சியாக நாளை சின்ன சேஷ வாகனத்திலும் அருள் பாலிக்கிறார்.11-ஆம் தேதி கருட வாகனத்தில் காட்சி தரும் விழா, பிரசோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அன்றைய தினம் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சாத்துவார், மேலும், தேவஸ்தான வளர்ச்சி பணிகளையும் அவர் தொடங்கி வைக்க உள்ளார். 15-ஆம் தேதி மாலையில் சக்கர ஸ்நானத்துடன் பிரமோற்சவ விழா நிறைவு பெறுகிறது