சர்வதேச அளவில் தலைமுடிக்கான சந்தை மதிப்பு குறைந்ததால், திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்கு முடி விற்பனையால் கிடைக்கும் லாபம் குறைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2017 - 18 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுகளுடன் கூடிய பட்ஜெட் தாக்கலின் போது அறங்காவல் குழுவினர் இதனை தெரிவித்துள்ளனர். கடந்தாண்டு முடி விற்பனை மூலம் 150 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்ப்பார்த்த நிலையில், நூறு கோடி ரூபாய் மட்டுமே வருவாய் கிடைத்ததாகக் கூறியுள்ளனர். மின்கட்டணத்தை குறைக்கும் விதமாக திருமலையிலுள்ள அனைத்து இடங்களிலும் 4 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் எல்.இ.டி பல்புகள் மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், திருப்பதி அடுத்த பேரூரிலுள்ள வகுலமாத கோயிலை புனரமைக்க 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறங்காவலர் குழுவினர் தெரிவித்துள்ளனர்.