திருப்பதி: சிசிடிவி மூலம் தனிமனித இடைவெளியைக் கண்காணிக்கும் அதிகாரிகள்!!

திருப்பதி: சிசிடிவி மூலம் தனிமனித இடைவெளியைக் கண்காணிக்கும் அதிகாரிகள்!!
திருப்பதி: சிசிடிவி மூலம் தனிமனித இடைவெளியைக் கண்காணிக்கும் அதிகாரிகள்!!
Published on

திருப்பதி திருமலையில் பக்தர்கள் தனிமனித இடைவெளியை பின்பற்றுகிறார்களா என்பதை சிசிடிவி கேமராக்கள் மூலம் விஜிலென்ஸ் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 11ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். முன்னதாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முதல் 3 நாட்களாக தேவஸ்தான ஊழியர்கள், உள்ளூர்வாசிகளுக்கு சோதனை அடிப்படையில் தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டு வெள்ளோட்டம் நடத்தப்பட்டது. தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கு அலிபிரி மலையடிவாரம் முதல் சாபமி சன்னதி வரை அனைத்து இடங்களிலும் மத்திய, மாநில அரசுகள் அறிவித்த நிபந்தனைகள் கடைபிடிக்கப்பட்டு பக்தர்களுக்கு தெர்மல் ஸ்கேனிங் செய்யப்படுகிறது.

மேலும் தனி மனித இடைவெளியும் கடைபிடிக்கப்படுகிறது. சாமி தரிசனம் செய்ய வரும் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாஸ்க் அணியாதவர்களுக்கு தரிசனம் இல்லை என்றும் கூறப்பட்டு இருக்கிறது. திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் காலை 6.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

ஒரு நாளைக்கு 9 ஆயிரத்து 750 பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. இந்நிலையில், பக்தர்கள் தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்கிறார்களா என தேவஸ்தானத்தின் விஜிலென்ஸ் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்காதவர்களை சிகப்பு நிறத்திலும், கடைபிடிப்பவர்களை பச்சை நிறத்திலும் சிசிடிவி காட்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆகவே முழுமுடக்க விதிமுறைகளை பக்தர்கள் அனைவரும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com