“பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தும் காலம் முடிந்துவிட்டது”- பிரதமர் மோடி

“பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தும் காலம் முடிந்துவிட்டது”- பிரதமர் மோடி
“பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தும் காலம் முடிந்துவிட்டது”- பிரதமர் மோடி
Published on

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான காலம் முடிந்துவிட்டது என பிரதமர் மோடி கூறியுள்ளார். 

அர்ஜெண்டினா அதிபர் மவுரிசியோ மேக்ரி மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்தப் பயணத்தின் முக்கிய அம்சமாக பாதுகாப்பு, சுற்றுலா, தொலைத்தொடர்பு, மருந்தியல், விவசாயம் உள்ளிட்ட 10 துறைகளில் ஒப்பந்தங்கள் ஏற்பட்டுள்ளன. 

அதிபர் மவுரிசியோ மேக்ரி உடனான சந்திப்பிற்கு பின்னர் பேசிய பிரதமர் மோடி, உலக அமைதியை சீர்குலைக்கும் பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவும் அர்ஜென்டினாவும் கைகோர்த்திருப்பதாகவும் இதேபோல் உலக நாடுகள் ஒன்றிணைந்து பயங்கரவாதத்துக்கு எதிராக கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

“பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஊசலாட்டம் இருக்கிறது. அவர்களின் ஆதரவாளர்கள் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பவர்கள் போல் இருக்கிறார்கள். ஜி20 அமைப்பில் உள்ள நாடுகள் என்ற அடிப்படையில் ஹம்பர்க் தலைவர்களின் அறிக்கையில் இடம்பெற்றுள்ள 11 அம்சங்களை அமல்படுத்த வேண்டும். பயங்கரவாதிகளுக்கு எதிராக உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். 

பிரதமர் மோடியின் கருத்துக்கு பதிலளித்த அர்ஜெண்டினா அதிபர், பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் கூட்டாக செயல்பட வேண்டிய தேவை உள்ளது என்று கூறினார். மேலும் எந்தவிதமான பயங்கரவாதத்தையும் கண்டிப்பதாக அவர் கூறினார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com