‘டிக்டாக்’ செயலியை தடை செய்ய கோரிய வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
சமூக வலைத்தளமான ‘டிக்டாக்’ செயலியை தடை செய்வது குறித்து வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற கோரி ‘டிக்டாக்’ நிறுவனம் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் மாற்ற முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நீதிபதிகள், “இந்த வழக்கில் பல தரப்பட்ட தொழில்நுட்ப விசாரணைகள் செய்ய வேண்டியுள்ளது. இதனை சென்னை உயர்நீதிமன்றமே தகுந்த முறையில் விசாரிக்கும்” எனத் தெரிவித்தனர்.