பூங்காவில் இருந்த புலி மாயம்: தீவிரமாக தேடும் அதிகாரிகள்.. பீதியில் மக்கள்..!

பூங்காவில் இருந்த புலி மாயம்: தீவிரமாக தேடும் அதிகாரிகள்.. பீதியில் மக்கள்..!
பூங்காவில் இருந்த புலி மாயம்: தீவிரமாக தேடும் அதிகாரிகள்.. பீதியில் மக்கள்..!
Published on

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள நெய்யார் லயன் சஃபாரி பூங்காவில் இருந்த புலியொன்று மாயமாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தப் பூங்காவில் இருந்த புலி சனிக்கிழமை பிற்பகலில் மாயமானது. இதனையடுத்து பூங்கா அதிகாரிகளும் உள்ளூர் மக்களும் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். இதனையடுத்து 2 மணி நேர தேடுதலுக்கு பின்பு பூங்காவின் உள்ளே ஓர் இடத்தில் புலி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து புலியை பிடிப்பதற்காக மயக்க ஊசி செலுத்தப்பட்டது. ஆனால் சில மணி நேரங்களில் அந்தப் புலி மீண்டும் மாயமானது.

நெய்யார் பூங்காவுக்கு இந்தப் புலியை வயநாட்டில் இருந்து இரு தினங்களுக்கு முன்புதான் கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தப் புலியை சனிக்கிழமைதான் கூண்டில் அடைக்கப்பட்டது. இந்தப் புலி கூண்டில் இருந்த கம்பியை வளைத்து தப்பித்துள்ளதாக பூங்கா ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். வயநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட நாளில் இருந்தே இந்தப் புலியை பிரத்யேக கூண்டில் அடைத்து வைத்திருந்தனர்.

நெய்யார் பூங்காவில் புலிகளையும் சிங்கங்களையும் பார்வையாளர்கள் பிரத்யேக பேருந்தின் மூலம் கண்டுகளிக்கும் வகையில் அமைக்கப்பட்டது. இந்தப் பூங்கா ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. புலி மாயமான தகவல் பரவியதை அடுத்து பூங்காவின் அருகாமையில் இருக்கும் மக்கள் பீதியடைந்தனர். ஆனால் பூங்காவை விட்டு புலி வெளியேற வாய்ப்பில்லை என்றும் அது பூங்காவின் உள்ளேதான் ஒளிந்துக்கொண்டு இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் புலியை கண்டுபிடிக்க டிரான் மற்றும் பல குழுக்களாக பிரிந்து தேடப்பட்டு வருகிறது. இந்தப் புலியை தேடும் பணி இன்று காலை மீண்டும் தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com