“வீர் சக்ரா’ விருதுப் பெற்ற ‘கார்கில் புலி’ - தற்போது டிராபிக் கான்ஸ்டபிள்

“வீர் சக்ரா’ விருதுப் பெற்ற ‘கார்கில் புலி’ - தற்போது டிராபிக் கான்ஸ்டபிள்
“வீர் சக்ரா’ விருதுப் பெற்ற ‘கார்கில் புலி’ - தற்போது டிராபிக் கான்ஸ்டபிள்
Published on

கார்கில் போரில் வீரமாக போரிட்டதற்காக ‘வீர் சக்ரா’ விருதுபெற்ற சத்பால் சிங் இன்று டிராபிக் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகிறார்.

1999ஆம் ஆண்டு பாகிஸ்தான் கார்கில் எல்லையை ஆக்கிரமித்ததால் இந்தியா போர் செய்தது. இந்தப் போரின் 20ஆம் ஆண்டு வெற்றி விழா இன்று கொண்டாடப்படுகிறது. பாகிஸ்தானை போரில் விரட்டியடிக்க இந்தியா மேற்கொண்டு அதிரடி நடவடிக்கை தான் ‘ஆப்ரேஷன் விஜய்’. 1999 ஜூன் 9ஆம் தேதி படாலிக் பகுதியில் இரண்டு முக்கிய நிலைகளை கைப்பற்றி இந்திய இராணுவம் கார்கிலில் மும்முனைத் தாக்குதலைத் தொடங்கியது. பதினோரு மணி நேர கடும் தாக்குதலுக்கு பின்னர் டைகர் ஹில் பகுதியை மீட்டது. 

இந்த டைகர் ஹில் பகுதியை மீட்க 2 அதிகாரிகள் தலைமையிலான 8 சிக்கிம் படையினர் களத்தில் இறங்கினர். அதில் 46 வீரர்கள் களம் கண்டனர். அத்துடன் 19 குண்டு எறியும் வீரர்கள் டைகர் ஹில் பகுதியை இந்தியாவின் வசம் கொண்டு வர உதவியாக இருந்தனர். இந்தப் போராட்டத்தில் பாகிஸ்தானின் உயரிய வீரர் என்ற விருது பெற்ற கேப்டன் கார்னல் ஷேர் கான் கொல்லப்பட்டார். அவருடன் மூன்று வீரர்களும் ஒரு இந்திய வீரரால் வீழ்த்தப்பட்டனர். அத்தகைய வீரம் கொண்ட இந்திய வீரர் தான் சத்பால் சிங். 20 வருடங்களாக இந்திய ராணுவத்தில் சிப்பாயாக இருந்த சத்பால் சிங்கிற்கு, கார்கில் போரின் வீர செயலுக்காக இந்தியாவின் உரிய விருதுகளில் ஒன்றான ‘வீர் சக்ரா’ விருது வழங்கப்பட்டது.

ஆனால் அத்தகைய சத்பால் சிங், தற்போது பஞ்சாப் மாநிலத்தின் சங்ரூர் மாவட்டத்தில் உள்ள பவனிகர் என்ற பகுதியில் டிராபிக் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகிறார். தனது பணி தொடர்பாக பேசியுள்ள சத்பால், “நான் தவறான முடிவு ஒன்றை எடுத்துவிட்டேன் போல. ‘வீர் சக்ரா’ விருதால் நான் எந்த முக்கியவத்துவத்தையும் பெறவில்லை. விளையாட்டுத் துறையில் விருது பெரும் நபர்கள் உயரிய ரேங்குகளை பெறுகின்றனர். நான் பாகிஸ்தானின் உயரிய விருது பெற்ற ஒருவரைக் கொன்றேன். எப்படியோ, கடவுளுக்கு கருணை இருக்கிறது. அவர் அருளால் நான் இன்னும் உயிருடன் இருக்கிறேன்” என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com