சாம்பார் சாதம் சாப்பிட்டதால் புலி இறந்ததா? - உண்மை என்ன? 

சாம்பார் சாதம் சாப்பிட்டதால் புலி இறந்ததா? - உண்மை என்ன? 
சாம்பார் சாதம் சாப்பிட்டதால் புலி இறந்ததா? - உண்மை என்ன? 
Published on

சாம்பார் சாதம் சாப்பிட்டதால் புலி இறந்துவிட்டது என பிழையான செய்தி ஒன்று பகிரப்பட்டு வருவதாக ஃபேஸ்புக்கில் ஒருவர் பதிவு போட்டுள்ளார். 

வட இந்தியாவில் ஒரு வனப்பகுதியில் புலி ஒன்று இறந்துள்ளது. இந்தப் புலி சாம்பார் சாதம் சாப்பிட்டதால் இறந்துவிட்டது என்று தவறான செய்தி ஒன்று பகிரப்பட்டு வந்தது. உண்மையில் புலி ஆனது மிளாவை வேட்டையாடி சாப்பிட்டுள்ளது. இந்த மிளாவை இந்தி மற்றும் ஆங்கில மொழியில் ‘சாம்பார் மான்’ எனக் கூறுவர். இதனைத் தவறாக புரிந்து கொண்டு செய்திகளில் சாம்பார் சாதம் சாப்பிட்டு மான் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

இதுகுறித்து வனவிலங்கு ஆர்வலரான ராமமூர்த்தி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு தகவலை பதிவிட்டுள்ளார். அதில்,“
சாம்பார் சாதம் சாப்பிட்டதால் புலி இறந்துவிட்டது என்று ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதுவும் இரத்த வாந்தி எடுத்து இறந்ததாக எழுதி உள்ளனர். என்ன கொடுமை? உண்மையை பல பத்திரிகைகள் வெளியிட்ட நிலையில் இது போன்ற தவறான செய்திகள்தான் பலரையும் சென்றடைந்து விடுகிறது. உண்மையில் புலி, மிளாவை அடித்து தின்றுள்ளது” எனப் பதிவிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com