மோடியின் மூன்றாவது அமைச்சரவை: அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ள மூன்று தமிழர்கள் - யார் யார்?

மோடியின் மூன்றாவது அமைச்சரவையிலும் மூன்று தமிழர்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர்.
Nirmala sitaraman, jaishankar, L.Murugan
Nirmala sitaraman, jaishankar, L.Muruganpt desk
Published on

பிரதமர் நரேந்திர மோடி, தனது புதிய அமைச்சரவையில் முன்பு இருந்தது போலவே மூன்று தமிழர்களை தேர்ந்தெடுத்துள்ளார். நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் மற்றும் எல்.முருகன் ஆகியோர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிரதமர் நரேந்திர மோடியுடன் பதவியேற்றனர்.

குடியரசு தலைவர் இல்லத்தில் நடைபெற்ற பதவி ஏற்பு நிகழ்ச்சியில், நிர்மலா சீதாராமன் மற்றும் ஜெய்சங்கர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்ட நிலையில், எல்.முருகன் இணை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

பிரதமர் மோடி பதவியேற்பு
பிரதமர் மோடி பதவியேற்பு

2019 முதல் 2024 வரை வெளியுறவுத் துறை அமைச்சராக பணியாற்றிய ஜெய்சங்கருக்கு மீண்டும் அதே துறை ஒதுக்கப்படும் என பாஜக தலைவர்கள் தெரிவித்தனர். அதேபோல் 2019 முதல் 2024 வரை நிதி அமைச்சராக முக்கிய பொறுப்பு வகித்த நிர்மலா சீதாராமனுக்கு முக்கிய பொருளாதார துறை ஒதுக்கப்படும் என கருதப்படுகிறது.

தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத நிலையில், புதிதாக யாருக்கும் மோடி அமைச்சரவையில் பொறுப்பு அளிக்கப்படவில்லை.

Nirmala sitaraman, jaishankar, L.Murugan
“இணையமைச்சர் பதவி வேணாம்... கேபினட் அமைச்சர் பதவி வேணும்...” - ட்விஸ்ட் வைக்கும் தேசியவாத காங்கிரஸ்!

2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் தமிழ்நாட்டில் ஒரு பாஜக வேட்பாளர் கூட வெற்றி பெறவில்லை என்பதால், மோடி அமைச்சரவையில் பொறுப்பேற்ற மூன்று தமிழர்களும் மாநிலங்களவை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்கள் பிற மாநிலங்களில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

நிர்மலா சீதாராமன் கர்நாடக மாநிலத்தில் இருந்தும், ஜெய்சங்கர் குஜராத் மாநிலத்தில் இருந்தும் எல்.முருகன் மத்திய பிரதேசம் மாநிலத்தில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com