கர்நாடகாவில் சந்தன மரங்களை கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் கைது

கர்நாடகாவில் சந்தன மரங்களை கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் கைது
கர்நாடகாவில் சந்தன மரங்களை கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் கைது
Published on

கர்நாடகாவில் சந்தன மரம் கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் குப்பி தாலுகாவில் கம்பள புரா - ஹரகலதேவி வனப்பகுதியில் சுமார் ஆயிரத்து 223 ஏக்கர் நிலப்பரப்பில் மிகப் பெரிய வனப்பகுதிகள் உள்ளன. இந்த வனப்பகுதியில் ஏராளமான சந்தன மரங்கள் இருப்பதை அறிந்த சந்தனமர கடத்தல் கும்பல், சந்தன மரங்களை வெட்டி கடத்தும் திட்டத்துடன் மலைப்பகுதியில் முகாமிட்டுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த கர்நாடக மாநில வனத்துறை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி மூவரை பிடித்தனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த தமிழ்நாடு கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்த மூர்த்தி (28) மல்லப்பா (58) கிருஷ்ணா (28) ஆகியோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிகிச்சை முடிந்த பிறகு அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என தும்கூர் மாவட்ட வனத்துறை அதிகாரி ரமேஷ் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com