3 சட்டங்களின் பெயர்களில் ‘இந்தியா’விற்கு பதில் ‘பாரத்’-மக்களவையில் மசோதாவை அறிமுகம் செய்தார் அமித்ஷா

இந்திய தண்டனை சட்டம் உள்ளிட்ட 3 சட்டங்களின் பெயர்களில் பாரத் என திருத்தம் செய்து மக்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் அதற்கான மசோதாக்களை தாக்கல் செய்தார்.
amitsha
amitshapt web
Published on

இந்தியாவில் வழக்குகள் எப்படி பதிவு செய்யப்படுகின்றன, விசாரணை எப்படி நடக்கிறது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்களில் மாற்றங்களை கொண்டு வரும் மூன்று சட்டத்திருத்தங்களை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிமுகம் செய்துள்ளார்.

இதில் ஐபிசி அல்லது இந்திய தண்டனை சட்டம் புதுப்பிக்கப்பட்டு ‘பாரதிய நியாய சங்ஹீத’என்ற பெயருடன் புது சட்டமாக மாற உள்ளது.

கிரிமினல் புரோசீஜர் கோட் அல்லது இந்திய குற்றவியல் சட்டம் புதுப்பிக்கப்பட்டு பாரதிய சக்ஷ்யா என்றும் இந்திய ஆதார சட்டம் பாரதிய நாகிரிக் சக்ஷயா என்றும் பெயர் மாற்றுவதற்கான சட்டத்திருத்தத்தை மக்களவையில் அமித்ஷா தாக்கல் செய்துள்ளார்.

இந்த மூன்று சட்டங்களும் புதிய உருவம் புதிய வடிவம் பெறுகின்றன என்றும் இந்த சட்டங்களில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு மக்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையிலும் மக்களுக்கு சுலபமாக இருக்கும் வகையிலும் குற்றவியல் நடைமுறைகள் மாற்றப்படுகின்றன என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இந்த மூன்று சட்டங்களுக்கான மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட போது எதிர்கட்சிகள் அவையில் இல்லை. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவையை புறக்கணித்திருந்தனர்.

இத்தகைய சூழலில் இன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் இறுதி நாளில் இந்த மூன்று மசோதாக்களை அமித்ஷா தாக்கல் செய்துள்ளார்.

இந்த மூன்று மசோதாக்களும் நாடாளுமன்ற நிலைக்குழுக்களுக்கு அனுப்பப்படும் என்றும் அங்கு ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் அனைவரும் இதை பரிசீலனை செய்து தங்களது ஆலோசனைகளை அளித்த பிறகு மீண்டும் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு கொண்டு வரப்படும் என அமித்ஷா அறிவித்துள்ளார். மிக முக்கியமான மூன்று சட்டங்களை மாற்றி அமைப்பதற்கான சீர்திருத்தம் செய்வதற்கான முடிவை உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com