இடுக்கி மாவட்டத்தில் மூணாறு வனப்பகுதியில் அடுத்தடுத்து முன்று குட்டி யானைகள் உயிரிழப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக கேரள எல்லையை இணைக்கும் சுற்றுலா தலமான மூணாறு வன விலங்குகளின் புகலிடமாக உள்ளது. குறிப்பாக யானைகள் இங்கு அதிக எண்ணிக்கையில் உள்ளன.
மூணாறு வரும் சுற்றுலா பயணிகள் குட்டிகளுடன் வரும் யானைக் குட்டிகளை கண்டு ரசிப்பது வழக்கம். இந்நிலையில் மூணாறு அருகே தேவிக்குளம் வனசரகத்திற்க்கு உட்பட்ட புதுக்கடி வனப்பகுதியில் மூன்று வயது மதிக்கத்தக்க ஒரு குட்டியானையும் தொடர்ந்து குண்டலா வனப்பகுதியில் இரண்டு வயது நிரம்பிய மேலும் இரண்டு குட்டி யானைகள் என மூன்று குட்டி யானைகள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
குட்டியானைகளில் தொடர் உயிரிழப்பிற்கான காரணம் குறித்து வனதுறையினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். உடற்கூராய்விற்கு பின்பே குட்டியானைகளின் உயிரிழப்பிற்கான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மூணாறு பகுதியில் மூன்று குட்டியானைகளின் உயிரிழப்பு அதிர்ச்சிக்குரிய விஷயமாகியுள்ளது.